Sunday, December 17, 2017

இரவு முழுவதும் ஊற வைத்தெடுத்த‌ அதிமதுரத்தில் கஷாயம் தயாரித்து காலையில் குடித்து வந்தால்.

இரவு முழுவதும் ஊறவைத்தெடுத்த‌ அதிமதுரத்தில் கஷாயம் தயாரித்து காலையில் குடித்து வந்தால்

இயற்கையாக கிடைக்க‍க் கூடிய மூலிகை வகைகளில் இந்த அதிமதுரம் (Licorice) மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக‌ இனிமையான குரலுக்கு இத னை சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்க‍ம். ஆனால் இதையும்தாண்டி எண்ண‍ற்ற‍ மருத்துவ பண்புகள் இந்த அதிமது ரத்தில் அடங்கியுள்ள‍து. அந்த மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காணவிரு க்கிறோம்.
நாட்பட்ட‍மூட்டுவலி (Knee Pain)யால் அவதிபடுபவர்க‌ளுக்கு, சிறுநீர்ப்பை (bladder)யில் ஏற்பட்ட‍ புண்களால் அவதியுறுபவர்களும், கல்லடைப்பால் பாதிக்க‍ ப்பட்ட‍வர்களும் இந்த எளிய வைத்தியத்தை மேற்கொண்டால் சுகம் காணலாம்.
ஆம் இரவு முழுவதும் ஊற வைத்து அதிமதுரத்தை மறுநாள் காலையில் எடுத்து அதில் கஷாயம் தயாரித்து, இதனை அவர்கள் குடித்து வந்தால் மூட்டுவலி  ( Knee Pain) குணமாகும். சிறுநீர் சிறுநீர்ப்பை (bladder) புண்களை ஆற்றும். கல்லடை ப்பை நீக்கும் என்ற குறிப்பு சித்த மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகள் காணப்படுகின்றன•
இது பொது மருத்துவம் மட்டுமே! உங்களது உடலுக்கு ஏற்றதா என்பதை உங்களது மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...