ஒருமுறை தேவலோகத்தில் ஜோதிடத்தை பற்றி சர்ச்சை நடந்து .அப்போது சனி பகவான் கேட்டார் நவகிரகங்களின் சஞ்சாரநிலையை துல்லியமாக கணக்கிடும் திறமை வாய்ந்தவர் யாராவது உலகத்தில் எங்காவது இருக்கிறார்களா?என்று அந்த சமயம் பிருகு முனிவர் சொன்னார்கள் கிரகசஞ்சாரத்தை மிகசரியாக கணிக்கும் திறமை உள்ளவர்கள் பூலோகத்தில் நிறையபேர் இருக்கிறார்கள் என்றார்.
சனி பகவான் உஜ்ஜெயினியை அடுத்த ஒரு கிராமத்திற்க்கு வந்து சேர்ந்தார் அங்கு ஒரு ஆடு மேய்ப்பவனை கண்டார் அவனிடம் கேட்டார் நான் உஜ்ஜெயினிக்கு சென்று காளிதாசனை காணவேண்டும் உஜ்ஜேயினிக்கு செல்லும் வழி இதுதானா என்று கேட்டார்.
எதற்காக காளிதாசனை காணசெல்கிறீர் என்று ஆடு மேய்ப்பவன் சனி பகவானை பார்த்துக் கேட்டான் அதற்கு சனி பகவான் காளிதாசன் கிரகசஞ்சாரங்களை துல்லியமாக கணக்கிடுவதில் மிக சிறந்தவர் என கேள்வி பட்டேன் அதை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளவே அவனை காண செல்கிறேன் என்றார் இதை கேட்ட ஆடு மேய்ப்பவன் இதற்காக நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்னிடம் கேளுங்கள் நானே கணித்து சொல்கிறேன் என்றான்
சனி பகவான் ஆடு மேய்ப்பவனை மேலும் கீழும் நோக்கினார் இவனை பரிசோதனை செய்யலாம் என நினைத்து சனிபகவான் எந்த இடத்தில் உள்ளார் எனக்கூறு பார்க்கலாம் என்றார். ஆடு மேய்ப்பவன் கூட்டி கழித்து கணிதம் செய்து சனிபககவான் தற்போது உஜ்ஜெயினிக்கு சமீபத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் எனகூறினான்.
இதை கேட்ட சனி பகவான் அசந்து போய் விட்டார். ஒரு ஆடு மேய்ப்பவனுக்கே கிரகசஞ்சாரங்களை துல்லியமாக கணக்கிடும் திறமை இருக்கிறது என்றால் அது அவ்வளவு நல்லது இல்லை என எண்ணிய சனி பகவான் இனிவரும் காலங்களில் கிரகசஞ்சாரங்கள் சரியாக கணிக்கப்பட கூடாது என சபித்து விட்டாராம் அதன் பின் தான் தோதிட கனிதங்களில் பல வேறு பாடுகளும் குழப்பங்களும் உண்டானது என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment