Saturday, September 15, 2018

கடைக்குட்டி_சிங்கம்_விமர்சனம் .

********************************,
கடைக்குட்டி சிங்கம்..
கடைக்கோடி மக்களும் பார்த்து ரசிக்க வேண்டிய சிங்கம்.... ஆம்
படத்தின் ஆரம்பமும் அமர்க்களம்... படத்தின் முடிவோ அதை விட அமர்க்களம்...!!
ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காய்.. மறு திருமணமும்...
ஐந்து பெண் குழந்தைகள்க்கும் தூய தமிழ் (ராணிப் )பெயர்களும்
மகள் கர்ப்பவதியாய் இருக்கும் போது . ...
அம்மாவும் கர்ப்பமாகி..
பேத்தி எடுத்தும்...
பிள்ளை பெற்றுக் கொண்டு
ஊரையே கலக்கும் #சத்யராஜ்ம்...
இந்த ஆட்டத்தையாடா
இத்தனை நாள் தடை விதித்தீங்க
என ரேக்ளா ரேஸ் க்கு ஆதரவாக
குட்டு வைக்கும் #சூரியும்
Image may contain: 11 people, people smiling, people standing
#விவசாயி என்ற பெயர் பொறித்த பைக்கும்
பந்தயத்தில் வென்று
பரிசை வென்று காளைகளோடு
வெற்றி நடைப்போட்டு.....வருவதும்
மாமன் மகள் காதுகுத்து பத்திரிகையில் ..
படித்த பட்டத்திற்கு பதில் விவசாயி எனப் போடச் சொல்லும்
நம்ம #கடைக்குட்டி_சிங்கம்_கார்த்தியும்..
கலக்கல்....
விருந்தினர்கள்க்கு #மண்குவளையில் தேநீரும்
புறப்பட்டு செல்லும் போது
#மரக்கன்றும்...
அக்கா மகளிடம் வம்பு செய்பவர்களை அடிக்க..
#தென்னம்பாளையும்...
#துடைப்பமும்..
சண்டை காட்சிகள்...
முழுக்க முழுக்க..
#நொங்கும் #மூங்கில்_கூடையும்
சூழ்ந்திருப்பதும்
காதலி தேடி மினி பஸ் ஏறி வரும் போது...
விசில் கொடுத்ததும் ஓட்டுவதற்கு
ஆள் இல்லாமல்....
பேருந்தை பின் தொடரும் #காளைகளும்...
அனிமேஷன் கிராபிக்ஸ் இல்லாமல்..
#வயகாட்டிலும்.. #பூந்தோட்டத்திலும் அமைந்த பாடல்களும்..
விவசாயம் பற்றி கல்லூரியில் பேசுவதும்..
#பறையிசையும்..
உறவுகளை அரவனைப்பது எப்படி
என்றும்...
மிகவும் நேர்த்தியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்து ரசித்து பார்த்த படம்...
இயன்றவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.....
மீண்டும் நமது மண்வாசத்தை மகிழ்ச்சியும் உணர்ச்சியும் கொண்டு நுகர...
-#குறை
அந்த கால விளையாட்டுக்களையும் இணைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...