காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.
அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.
அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.
இந்த தற்கொலை தாக்குதல் நடத்தியது ஆதில் அகமது தர் என்ற நபர் தான் என்பது தெரிய வந்த நிலையில், அவனை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆதில் அகமது தர் ஜம்மு காஷ்மீரின் கண்டிபா பகுதியைச் சேர்ந்தவன். கண்டிபா தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஆதிலின் தந்தையின் பெயர் ரியாஸ் அகமது. அவர் அங்கு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆதில் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, அருகிலிருக்கும் மில் ஒன்றிற்கு வேலை சென்று வந்துள்ளான். அப்போது இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் மூலம் இவனுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது.
கடந்த 2016 மார்ச் மாதத்தில் இருந்து ஆதில் மற்றும் அவனது நண்பர்கள் தவுசீப் மற்றும் வாசிமை காணவில்லை. தவுசீப் மூத்த சகோதரர மன்சூர் தீவிரவாதி ஆவார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
அதன் பின் அவனை பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு திடீரென காணாமல் போன ஆதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள்ளான். அங்கு இருந்த பயங்கரவாத அமைப்பினர் அவனை தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்தியுள்ளனர். தயாராகிக் கொண்டிருந்த போதே, அவன் பெரிய தாக்குதல் ஒன்றிற்காக காத்து கொண்டிருந்துள்ளான். அதன்படி நேற்று இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளான். இவன், அந்த பயங்கரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என போலீசார் கூறியுள்ளனர்.
350 கிலோ வெடிமருந்துடன் வந்து பஸ்சில் மோதியதாக கூறப்படுகிறது ஆனால் பாதுகாப்பு துறை இது ஒரு பிரசாரம் என மறுத்து உள்ளது. 100 கிலோ வெடிமருந்துடன் எதிர் திசையில் வந்து பஸ்சில் மோதி உள்ளான்.
உள்ளூர் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து, அவர்களை தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்துவதை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடந்து செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டான். இவனைப் போல உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு, தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் இறந்த 44 பேரில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் உடனடியாக ஆதில் அகமது தர் குறித்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில் காஷ்மீர் முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்த பயங்கரவாத பேச்சுக்கள் உள்ளன. வீடியோவில் ஜெய்ஷ் - இ- முகமது பதாகைக்கு முன்னால் ஆதில் துப்பாக்கியுடன் காணப்படுகிறான்.
வீடியோவில் ஆதில் அகமது தர் பேசியுள்ளான். "இதை நீங்கள் பார்க்கும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். ஓராண்டாக ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பில் பணியாற்றினேன். இது காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. இந்தியாவுக்கு எதிராக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். அதில் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும். எங்கள் அமைப்பின் தலைவரை சமீபத்தில் கொன்றுள்ளனர். அதனால் நாங்கள் வலுவிழந்து விடுவோம் என நினைத்துள்ளனர், அது நடக்காது" என்று கூறி உள்ளான்.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39). இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை தாக்க முற்பட்டனர்.
ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தையும் சில தேச விரோதிகள்...
இது தேர்தலுக்கான மோடியின் திட்டம் என முட்டாள் தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தேர்தலுக்கான மோடியின் திட்டம் என முட்டாள் தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதெப்படி பாதுகாப்பு நிறைந்த ஒரு சாலையில் 350 கிலோ வெடி மருந்தோடு வந்து ஒரு தீவிரவாதியால் தாக்குதல் நடத்த முடியும்.. இதில் ஏதோ அரசியல் உள்நோக்கம்
இருக்கிறது என - #சில_மோடி எதிர்ப்பாளர்களும்... மதவெறியர்களும்...
#420_தினகரன்_கும்பலின்_ஆதரவாளர்களும்...
புளுகி திரிகிறார்கள்...
இருக்கிறது என - #சில_மோடி எதிர்ப்பாளர்களும்... மதவெறியர்களும்...
#420_தினகரன்_கும்பலின்_ஆதரவாளர்களும்...
புளுகி திரிகிறார்கள்...
வல்லரசு நாடான அமெரிக்காவில் அவர்களின் உச்ச பட்ச பாதுகாப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி.. அவர்கள் நாட்டு விமானங்களையே கடத்தி... உலக வர்த்தக மைய கட்டிடங்களான இரட்டை கோபுரத்தை தகர்த்த போது...அந்த நாட்டின் மக்கள் அரசாங்கத்தின் மீது சந்தேக படவில்லை.
எல்லோரும் ஒன்றுப்பட்டு தீவிரவாதத்தை வேறருக்க குரலெழுப்பினர். விளைவு அந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஒட்டு மொத்த பேரையும் வெறித்தனத்தோடு வேட்டையாடியது அமெரிக்கா.
எல்லோரும் ஒன்றுப்பட்டு தீவிரவாதத்தை வேறருக்க குரலெழுப்பினர். விளைவு அந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஒட்டு மொத்த பேரையும் வெறித்தனத்தோடு வேட்டையாடியது அமெரிக்கா.
இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களை தற்கொலை படையினராக மாற்றிக்கொள்ள கூடியவர்கள். அவர்களால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும்.
ஏனெனில்.. அதுபோன்ற தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிறைய பேர் நம்மோடே வாழ்ந்துக்கொண்டு அவர்களுக்கு உளவாளிகளாக செயல்படுவதால்....
ஏனெனில்.. அதுபோன்ற தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிறைய பேர் நம்மோடே வாழ்ந்துக்கொண்டு அவர்களுக்கு உளவாளிகளாக செயல்படுவதால்....
No comments:
Post a Comment