அது 1967 ம் ஆண்டு. தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப் பட்டு விட்டு, பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது ஆட்சியிலிருந்தது காங்கிரஸை சேர்ந்த திரு. பக்தவத்சலம் அவர்கள். ஒரே ஒரு ஊழல் குற்றசாட்டு கூட கூற முடியாத ஆட்சி.
அவருடைய மந்திரி சபையில் இருந்த ஜாம்பவான்கள் யார் யார் தெரியுமா? திருவாளர்கள் சி.சுப்ரமணியம், ஓ.வி.அளகேசன், கக்கன், சர்க்கரை மன்றாடியார், ஜோதி வெங்கடாசலம் போன்ற உத்தமர்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்மவீரர் திரு. காமராஜர் அவர்கள்.
எப்பாடு பட்டாவது காங்கிரஸை கீழே இறக்கி விட வேண்டுமென்ற வெறியில் ராஜாஜி அண்ணாதுரையோடு அணி சேர்ந்தார். அதுதான் அவர் செய்த மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறு. “பிராமணர்கள் பூணலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று ராஜாஜி பிரச்சாரம் செய்தார்.
அப்போது காமராஜர் சிறிது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார். தேர்தலைப் பற்றி அவர் சொன்ன புகழ் பெற்ற வாக்கியம்தான், “நான் மருத்துவமனையில் இருந்தால் என்ன? படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்”. ஆனால் ஊர் பேர் தெரியாத ஒரு மாணவனிடம் அவருடைய சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனார் காமராஜர்.
அந்த தேர்தலில் முக்கியப் பங்கு வகித்தது திமுகவின் பிரச்சார உத்தி. சிறிய, ஆனால் வலிமை மிக்க ஸ்லோகன்களை அவர்கள் உண்டாக்கி அதை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்தார்கள். அது ஒரு கவர்ச்சியான ப்ரச்சார உத்தி. லாரி நிறைய கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டு அந்த ஸ்லோகன்களை கைகளைத் தட்டிக் கொண்டு பாடிக் கொண்டே வருவார்கள். அது வாக்காளர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அவை என்னென்ன ஸ்லோகன்கள் தெரியுமா?
1. பக்தவத்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி?
2. காமராஜர் அண்ணாச்சி; கருப்பட்டி விலை என்னாச்சி?
3. இந்தப் படை போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா?
4. பக்தவத்சலம் குரங்கு, பதவியை விட்டு இறங்கு...
5. அளகேசன் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி?
2. காமராஜர் அண்ணாச்சி; கருப்பட்டி விலை என்னாச்சி?
3. இந்தப் படை போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா?
4. பக்தவத்சலம் குரங்கு, பதவியை விட்டு இறங்கு...
5. அளகேசன் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி?
இவைகளைத் திரும்பத் திரும்ப சொல்லி சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். விளைவு.....வெற்றி. சுதந்திரம் அடைந்த பிறகு அசையாமல் ஆட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் முதன் முறையாக வீழ்ச்சி அடைந்தது. இன்று வரை எழுந்திருக்கவே இல்லை.
எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் இதைப் போன்ற கவர்ச்சியான, சிறிய ஆனால் வலிமையான ஸ்லோகன்கள் இன்று பாஜகவிற்கு மிக அவசியம். ஹிந்தியில் சிறு சிறு வாக்கியங்களாக அமைத்து விட்டார்கள். ஆனால் தமிழில் சரியான வாக்கியங்கள் உருவாக வில்லை. ஒன்றே ஒன்று மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.
ஆனால் இது ஒன்று மட்டுமே போதாதே. முடிந்தவர்கள் அமைத்துத் தாருங்களேன். நாம் பிரபலப் படுத்துவோம். நான் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி....
No comments:
Post a Comment