Saturday, February 2, 2019

எளிய விளக்கம்.

நேற்று அலுவலகத்தில் பணியாக இருந்த போது, உடன் பணி புரியும் ஒருவர் வேகமாக வந்து, "பார்த்தா , வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தி விட்டார்கள்" என்று கூற , நான் அவரிடம், "இந்த அரசு அதுலாம் செய்யாது நீங்க வேற, பேக் நியூஸ் பாத்துட்டு வந்து சொல்லாதீங்க" என்று கூறி அனுப்பிவிட்டு, நியூஸை படித்து பார்த்தேன், க்ளாஸ் 87 பகுதியில் மாற்றம் செய்திருப்பதாக செய்தி வந்திருந்தது. மாலையில் அறிக்கையை டவுன்லோட் செய்து படித்து பார்த்தேன், அதில் இருக்கும் விவரத்தை இங்கே இணைக்கிறேன் . அதாவது 6.5 லட்சம் வரை வருமான வரி இல்லை . அதாவது 5 லட்சம் +1.5 லட்சம் வரை.
ஆனால், 650001 ருபாய் சம்பளம் வாங்கினால், நான் 2.5 லட்சத்திலிருந்து வரி கட்ட வேண்டும் . அதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு எளிய விளக்கம். நானும் என் நண்பனும், ஒரே நாளில் அலுவலகத்தில் பணிக்கு சேருகிறோம் . 5 லட்சம் முதல் சம்பளமாக . இப்போது இருவருக்கும் ஓராண்டு கழித்து அடுத்த சம்பள பிரிவுக்கு செல்கிறோம். அதாவது 6.5 லட்சம். நான் கடினமாக உழைத்தனின் பலனாக எனக்கு இன்சென்டிவ் ஆக ஒரு 10000 ரூபாய் அதிகமாக வழங்க படுகிறது. அதாவது அந்த ஆண்டு என் சம்பளம், 660000 ஆக ஆகிறது, அதாவது நான் 20500 வரி கட்ட வேண்டும், மிச்சம் உள்ள 410000 ரூபாய்க்கு , ஆக ராப்பகலாக கஷ்ட பட்டு உழைத்ததை விட உழைக்காதவன், அதிக சம்பளம் வாங்குவதாக பொருள் உண்டாகிறது.
இது போன்ற அறிவு பூர்வமான, யோசனைகளை யார் வழங்குகிறார்கள் என்ற சந்தேகம் என்னுள் எழாமல் இல்லை.
இதற்கு மோடி வாழ்க, ராகுல் ஒழிக என்ற கோஷம் எதற்கு என்று தான் தெரியவில்லை. மற்றவர்கள் எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக நான் பாராட்ட முடியாது. சோ சொல்வது போல் , தவறு என்று தெரிந்தால், தனியாக இருந்தாலும், உன் கருத்தை தெளிவு படுத்து என்பதை தான் நான் கடை பிடிக்க முடியும்.
எந்த துறை க்கு எவ்வளவு ஒதுக்குகிறார்கள் என்பதை பற்றிய கவலை, சாமானிய ஒருவனாக எப்போதோ என் கவலைகளை விட்டு விட்டேன்.
ஏன் என்றால், துறைக்கு ஒதுக்குகிறீர்களா அல்லது, அவர்கள் வீட்டுக்கு ஒதுக்குகிறார்களா என்றே தெரிவதில்லை . இந்த நிதி நிலை அறிக்கையை பாராட்ட ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...