17/11/19 பிறக்கிறது... கார்த்திகை மாதம்..!!
🌟 ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அதிலும் கார்த்திகை மாதத்தில் பல சிறப்புகள் உண்டு.
🌟 கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாளன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் :
🌟 ஒவ்வொரு வருடமும் கேரள மாநிலம் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு வருவது வழக்கம்.
கார்த்திகை தீபத் திருநாள் :
🌟 கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது தீபத் திருநாள் ஆகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்.
சோமாவார விரதம் :
🌟 சோமவார விரதங்களில், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. சோமவார விரதம் என்பது கார்த்திகை திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைபிடிக்கும் விரதமுறையாகும். இவ்விரதமுறையை பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கை துணையோடு வளமான வாழ்வு பெறுவர். இந்நாளில் கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனை தரும்.
கார்த்திகை ஞாயிறு விரதம் :
🌟 கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிக சிறப்பானது. கார்த்திகை ஞாயிறு விரதமுறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பனிரெண்டு வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைபிடிப்பதால் நவகிரக பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.
முடவன் முழுக்கு :
🌟 மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலின், காவிரி தலத்தில் மக்கள் நீராடுவது சிறப்புடையதாகும். அதில், ஐப்பசி மாத கடைசியில் நடைபெறுவது கடை முழுக்கு, கார்த்திகை மாதத்தின் முதலில் நடைபெறுவது முடவன் முழுக்கு என்பர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. பாவங்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைக்க மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுங்கள்...!
No comments:
Post a Comment