Sunday, November 17, 2019

சிவாஜி முதல் யோகிபாபு வரை கால்பதித்த, 'மினி கோடம்பாக்கம்'

'சிவாஜி முதல் யோகிபாபு வரை என, இங்கு, கால்பதிக்காத நடிகர்களே இல்லை' எனக் கூறும்
அளவிற்கு, சினிமா மற்றும் 'டிவி' தொடர்கள் எடுக்கும், 'மினி கோடம்பாக்கமாக' சென்னை,
குன்றத்துாரில் உள்ள, கோவூர் கிராமம் திகழ்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், மாங்காடு அருகே அமைந்துள்ளது, கோவூர் ஊராட்சி. ஒரு காலத்தில், இந்த கிராமம், 20 அடி சாலை, பழமையை பறைசாற்றும் ஓட்டு வீடுகள், கோவில், விவசாயம் என, எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தது. கோவிலை சுற்றியிருந்த மரங்கள், பசுமையுடன் காட்சி தந்தன.இதன் காரணமாக, சினிமா இயக்குனர்களின் பார்வை, கோவூர் பகுதி மீது சாய்ந்தது.

படப்பிடிப்பு
கிராமத்து கதைக்கு ஏற்றாற்போல் அமைந்திருந்த காரணத்தால், 'செட்' அமைக்க வேண்டிய அவசியம் தேவை இல்லை என்பதை உணர்ந்த தயாரிப்பாளர்கள், கோவூரில் படப்பிடிப்பு நடத்த துவங்கினர்.இந்த கிராமத்தின், ஒரு பகுதி, தமிழ் சினிமா வரலாற்றில், முக்கிய பங்கு வகித்தது என்ற அளவிற்கு, கணக்கில் அடங்கா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 1970 முதல், 1990 வரை, வெளிவந்த பெரும்பாலான படங்களில், ஒரு காட்சி யாவது, இந்த ஊரில் எடுக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும், புதன் ஸ்தலமான சுந்தரேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்புறம், வரிசையாக அசோக மரம் அமைந்துள்ள பகுதி, பெரும்பாலான திரைப்படங்களில், நாம் பார்த்திருப்போம்.
 சிவாஜி முதல் யோகிபாபு வரை கால்பதித்த, 'மினி கோடம்பாக்கம்'

ரஜினிகாந்த் நடித்த, மாப்பிள்ளை படத்தில், 'என்னோட ராசி நல்ல ராசி...' என்ற பாடல், அதற்கு முந்தையே சண்டைக்காட்சி; கோவை பிரதர்ஸ் படத்தில், சத்யராஜ் - வடிவேலு நடத்தும்,
கிரிக்கெட் போட்டி, இந்த இடத்தில் எடுக்கப்பட்டவை.

மெகா தொடர்கள்

சிவாஜி முதல் யோகிபாபு வரை, இந்த ஊரில், கால் பதிக்காத நடிகர்களே இல்லை. எம்.ஜி.ஆர்., படங்களின் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும், சுந்தரேஸ்வரர் கோவிலுக்கும், கோவூர் கிராமத்துக்கும், அவர், அடிக்கடி வந்து சென்றுள்ளார்.'டிவி' தொடர்கள் கூட, படம் பிடிக்கப்பட்டுஉள்ளன. 'மெட்டி ஒலி, திருமதி செல்வம்' போன்ற பிரபலமான, மெகா தொடர்கள் இங்குள்ள, ஓட்டு வீடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில், ஏகப்பட்ட தொடர்கள் மட்டு மின்றி, தமிழ் சினிமா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்த, கவுண்டமணி - செந்தில் இணைந்து நடித்த, 20க்கும் மேற்பட்ட நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.இன்றும், நம்மை சிரிக்க வைக்கும், வைதேகி காத்திருந்தாள் படத்தில், 'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா; கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்ற காட்சிகள், அந்த வீட்டில் எடுக்கப்பட்டவையாகும்.

தமிழ் படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட படங்கள் கூட, எடுக்கப்பட்டுள்ளன. தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, என்.டி.ஆர்., படங்கள், அதிக நாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.நகர வளர்ச்சிக்கு ஏற்றாற்போல், இக்கிராமம் மாறினாலும், இன்னமும், பெரும்பாலான இடங்கள், வீடுகள், பழமை மாறால், அப்படியே உள்ளன. அதேநேரத்தில், முன்புபோல், ஏகப்பட்ட படப்பிடிப்புகள்
நடக்கவில்லை என்றாலும், அவ்வப்போது சினிமா, சீரியல்படப்பிடிப்பு தொடர்ந்து, இங்கு
எடுக்கத் தான் செய்கின்றனர்.

ஒரு காலத்தில், கோவூர் முழுவதும், சினிமா படப்பிடிப்புகள் அதிகமாக எடுக்கப்பட்டன.
ஏகப்பட்டதிரைப்படங்கள், சீரியல்கள்எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, பழமை மாறாத ஓட்டு
வீடுகள்என்றால், ஒன்று, இரண்டு மட்டும் தான் உள்ளன. அந்த வீடுகளிலும்தற்போது, படப்பிடிப்பு எடுப்பதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...