Monday, November 4, 2019

நம்ம தமிழ்நாட்டு தங்கம் *மக்காச்சோளம்*.

நிறைய பேருக்கு தெரியாது நம்ம ஊரில் தெருவுக்கு தெரு, அரசு பள்ளி வாசல்களில் மளிவாக விற்கப்படும் மக்காசோளத்தில் அதிக ஊட்டச்சத்து இருக்குதுன்னு.. இதுவும் ஒருவகை காய்கறி மற்றும் தானிய வகையை சார்ந்தது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலசிக்கல் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடமுடியும். அதிக உடல் எடையை குறைக்கவும் சோளம் சாப்பிடலாம்.
மஞ்சள் நிற சோளத்தில் ஒரு கப்பில் 392 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் வெள்ளை நிற சோளத்தில் 416 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை (Blood pressure) சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிக அளவு பொட்டாசியம் அனைவருக்கும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு நல்லதல்ல. சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் சொல்வதுபடி எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக கோதுமை, அரிசியை விட ஆன்டி ஆக்ஸிடென்ட் சோளத்தில் அதிகமாக இருப்பதால் செல்கள் சேதமடையாமல் இருக்கவும், புற்றுநோய் மற்றும் இதய புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கவும் உதவும். இதில் கரொடெனாய்டுகள், விட்டமின்-இ மற்றும் விட்டமின்-சி இருப்பதால் கண்களுக்கு மிகவும் சிறந்ததாகவும் சோளம் இருக்கிறது.
அதிக சத்துக்கள் நிறைந்த நம்ம ஊரு சோளத்தில் இவ்வளவு சத்து இருக்கும்போது தேவையில்லாத மற்ற மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
மேலும், கவனிக்க வேண்டியது மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மிகவும் தீங்கு விளைவிக்க கூடும். எனவே அவற்றை வாங்காமல் தவிர்த்து நம்ம ஊரு மரபணு மாற்றம் செய்யப்படாத சோளத்தை வாங்கி சாப்பிடுவோம். ஆரோக்கியமாய் வாழ்வோம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...