ஆம் நண்பர்களே ஜம்மு காஷ்மீரின் பிரதமராக ஆறு ஆண்டுகள் ஒரு தமிழர் பதவி வகித்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் ரயில்வே அமைச்சராகவும் இருந்திருக்கிறார், ஆகஸ்ட் 29, 1947 லில் ஏற்படுத்தப்பட்ட ஏழுபேர் கொண்ட அரசியல் சாசன வரைவு குழுவில் ஒருவராக திகழ்ந்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ஆர்டிகிள் 370 ஐ எழுதியவரும் இவரே..
31 மார்ச் 1882இல் தஞ்சாவூரில் பிறந்தவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர், பச்சையப்பா கல்லூரியின் உதவி பேராசிரியராக இருந்தியிருக்கிறார். மதராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களில் கலெக்டர்ராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணிபுரிந்திருக்கிறார்..
இந்திய அரசாங்க செயல்பாடுகள் மற்றும் அமைப்புகள் குறித்த ஒரு அறிக்கையை 1949ஆம் வருடம் சமர்ப்பித்தார் அதன்படியே இந்திய அரசும் ராணுவ கமிட்டி, பொருளாதார கமிட்டி, பாராளுமன்ற மற்றும் சட்ட கமிட்டி, நிர்வாக கமிட்டி ஆகியவற்றை புதிதாக அமைத்தது...
1948 முதல் 1952 வரை ரயில்வே அமைச்சராக மிக சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்.. இந்திய ரயில்வேயை ஆறு மண்டலங்களாக பிரித்து, ரயில்வேயில் சீர்திருத்தங்களை அமல்படுத்தி அசுரவளர்ச்சி அடையச்செய்தார்.
சுதந்திரத்திற்கு பின்பு இந்திய ராணுவத்தை ஒருங்கிணைக்கும் குழுவின் அங்கமாக பணியாற்றினார், 1953இல் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்..
1937 முதல் 1943 வரை ஜம்மு காஸ்மீரின் பிரதமராகவும், 1943 முதல் 1947 வரை காஸ்மீர் மாகாண செயற்குழுவில் அங்கத்தினராகவும் இருந்தார்.. ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீருக்கான விவகாரங்கள் குழுவின் இந்திய பிரதிநிதியாக ஜெனிவாவில் செயலாற்றினார்.
1953 ஆம் வருடம் தனது 71ஆம் வயதில் சென்னையில் காலமானார்..
இந்த சாதனை தமிழனின் பெயர் நா. கோபாலசாமி ஐயங்கார். வாழ்க அவரது புகழ்.
No comments:
Post a Comment