இது என்ன புதுக்கதை ?
புதுக்கதை எல்லாமில்லை ... பழைய கதைதான் ...
சென்னை மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி அருகில் உள்ள குளோப் தியேட்டர், சிலகாலம் கழித்து அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆக இருக்கிறது ....
அப்போ இது குளோப் தியேட்டர் ...
இந்த இடம் வட இந்தியாவை சேர்ந்த குஷால் தாஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது ....
இந்த கட்டிடத்தை குஷால் தாஸ் கிட்ட இருந்து 25 வருட குத்தகை அடிப்படையில் வரதராஜ பிள்ளை என்பவர் வருடத்துக்கு ரூ 5000/- என்ற ஒப்பந்தம் அடிப்படையில் பெற்று அதில் குளோப் தியேட்டர் நடத்தி வந்தார்.
தியேட்டர் மூலம் வாரத்துக்கு ரூ 8000/- வீதம் வருடத்துக்கு ரூ 4 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார்.
என்றாலும் ரூ 5000/- மட்டுமே ஆண்டிற்கு பெற்று வந்த குஷால் தாஸ் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.
குத்தகை காலம் முடிவடைந்ததும் மறு குத்தகை விடப்போவதில்லை என்றார் இட உரிமையாளர்.
வருடத்தில் எல்லா செலவும் போக சுளையாக 4 லட்சம் வருமானம் பார்த்த வரதராஜ பிள்ளை சும்மா இருப்பாரா ?
குஷால் தாஸ் & வரதராஜ பிள்ளை இருவரும் நீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டனர் ...
நீதிமன்ற தீர்ப்பு இட உரிமையாளர் குஷால் தாஸ்க்கு சாதகமாக வருகிறது .
6 வார காலத்தில் இடத்தை காலி செய்து உரிமையாளர் கிட்ட இடத்தை ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது கோர்ட்.
வரதராஜ பிள்ளை முரசொலி மாறன் கிட்ட போய் கண்ணை கசக்கி கொண்டு நின்றார்.
அவர் உள்ளாட்சி துறை அமைச்சர் ப.உ.ச அவரை பார்க்கச்சொன்னார்.
ப.உ.ச வரதராஜ பிள்ளையிடம் இதற்கு ஒரே தீர்வு சட்டமன்றத்தில் குத்தகைக்காரனுக்கே இடம் சொந்தம் என்று அவசர சட்டம் போடணும் .
முதல்வர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என கூறுகிறார் ...
வரதராஜ பிள்ளை முன்பணமாக ரூ 30000 /- ப.உ.ச கிட்ட கொடுக்கிறார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கருணாநிதி கிட்ட அழைத்துச்சென்றார்.
ஒரு லட்சம் கேட்கிறார் கருணாநிதி.
ப.உ.ச கிட்ட கொடுத்த ரூ 30,000/- மேலும் கருணாநிதி கிட்ட மேலும் ஒரு 30,000 /- ஆக ரூ 60,000/- முன்பணமாக கொடுக்கப்படுகிறது.
மீதியை பின்னர் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார் வரதராஜ பிள்ளை ...
குத்தகை சட்டம் திருத்தப்பட்டு நீண்டகால குத்தகையில் இருப்பவர்களுக்கு நிலம் உரிமை என்ற அவசர சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றியது.
கோர்ட் 6 வார காலத்தில் நிலத்தை உரிமையாளர் கிட்ட ஒப்படைக்க சொல்லி தீர்ப்பளித்துள்ளதால் அவசர சட்டம் அதற்குள் நிறைவேற வேண்டுமானால் ஜனாதிபதி கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும் .
அதற்காக சட்டமன்ற அவசர சட்ட தீர்மானம் பிளைட்டில் டில்லிக்கு கொண்டுசெல்லப்படுகிறது ...
" செத்தவன் சாமான் சுமப்பவன் தலைமேலே " என்பதுபோல் பயனாளி வரதராஜ பிள்ளை அச்செலவை ஏற்றுக்கொள்கிறார் ....
ஓரிருநாளில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அவசர சட்டம் அமலுக்கு வந்து வரதராஜ பிள்ளை இடத்தின் உரிமையாளராகி விடுகிறார் ...
மவுண்ட் ரோடு சொத்து வரதராஜ பிள்ளைக்கு உரிமையாகி விடுகிறது ..
சர்க்காரியா கமிசன் குற்றச்சாட்டுகளில் குளோப் தியேட்டர் குற்றச்சாட்டு பிரதானமானது ..
No comments:
Post a Comment