பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலா சுடிதார் அணிந்து நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சசிகலா சிறை விதிகளை மீறி அவ்வப்போது வெளியே சென்று வந்ததாகவும், சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளபட்டு சசிகலாவுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கியது உண்மைதான் என அறிக்கையில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு, சிறைச்சாலையில் உள்ள தனது அறைக்கு முன் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டும்தான் சிறைச்சாலையில் விதிகளின்படி ஆடை வழங்கப்படும் என்றும், ஊழல் வழக்கு மற்றும் ஓராண்டு, இரண்டாண்டு போன்ற கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ளலாம் என்றார்.
மேலும், சசிகலா வருமான வரி செலுத்தக் கூடிய நபர் என்பதால், அவர் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ள சிறை விதிகளில்இடம் உள்ளது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment