தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு, கவர்னர் உள்ளிட்ட பதவிகளை வாரி வழங்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளது. இதனால், தமிழக பா.ஜ., தலைவர் பதவி எதிர்பார்த்து கிடைக்காத, மூத்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. டிசம்பர், 15க்கு பின், புதிய தலைவரை நியமிக்க, டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதுவரை, கட்சிக்குள் நிலவுகிற கோஷ்டி மனப்பான்மையை ஒழிக்கும் முயற்சியில், மேலிடம் ஈடுபட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. டிசம்பர், 15க்கு பின், புதிய தலைவரை நியமிக்க, டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதுவரை, கட்சிக்குள் நிலவுகிற கோஷ்டி மனப்பான்மையை ஒழிக்கும் முயற்சியில், மேலிடம் ஈடுபட்டுள்ளது.
பதவிக்காலம்
மேலும், தலைவர் பதவியை எதிர்பார்த்து, கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க, மூத்த நிர்வாகிகளுக்கு, கவர்னர் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய பதவிகளை வழங்குவதன் வாயிலாக, அதிருப்தியை போக்க முடியும் என, மேலிடம் கருதுகிறது. அதனால் தான், மூத்த நிர்வாகியான மதுரையை சேர்ந்த சீனிவாசனுக்கு, கொங்கன் ரயில்வே இயக்குனர் பதவியும், ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராமிற்கு, தேசிய கனிமவள மேம்பாட்டு கழக இயக்குனர் பதவியும், சமீபத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தேசிய ரயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி, மத்திய ரயில்வே அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றக் கூடியது. இதேபோல, இன்னும் சில மூத்த நிர்வாகிகளுக்கும், மத்திய அரசின் வாரிய தலைவர்கள், உறுப்பினர்கள், இயக்குனர்கள் பதவிகள் கிடைக்க உள்ளன. துறை வாரியாக, கட்சியினரை பரிந்துரைக்கும் பட்டியலும், அக்கட்சியில் தயாராகி வருகிறது.
தெலுங்கானா மாநில கவர்னராக, தமிழிசை நியமிக்கப்பட்ட பின், மற்றொரு மூத்த தலைவர் ஒருவருக்கு, கவர்னர் பதவி வழங்க, கட்சி மேலிடம் முன்வந்தது. ஆனால், அந்த மூத்த தலைவர், தனக்கு கிடைக்க இருந்த கவர்னர் பதவியை வேண்டாம் என கூறி விட்டதாக தெரிகிறது.அதேபோல், விரைவில், மஹாராஷ்டிரா கவர்னரின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. இந்த மாநிலத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், கவர்னராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிருப்தி
கவர்னர் பதவியை தவிர்த்து, பொதுத் துறை நிறுவனங்களின் இயக்குனர் மற்றும் தலைவர் பதவிகள், குறிப்பாக, கேபினட் அமைச்சருக்கு இணையான பதவிகளை வழங்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்ப்பதுடன், தலைவர் பதவி கிடைக்காமல், யாரும் அதிருப்தி அடையும் நிலை ஏற்படாது என்று, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment