வங்கிகள் , தங்கள் வங்கி ATM தவிர்த்து இதர ATM மூலம் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிப்பார்களாம் .
இதுபோல் சொல்வதற்கு வங்கிகளின் நிர்வாகம் வெட்கப்படணும்.
தங்கள் வங்கியைத் தவிர இதர வங்கிகளில் ஏன் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கின்றார்கள் என்று வங்கி நிர்வாகம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதர வங்கிகளின் ATM ல் பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏன் வருகின்றது. ?
அவரவர் வங்கிகளின் ATM கள் வேலை செய்யாததே இதற்கு முதலும் முக்கிய காரணமும் ஆகும்.
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவரவர் தொகையை சம்பளம் மற்றும் ஓய்வூதிய ங்களை மாதா மாதம் அந்த நாளில் எடுக்க முடிகின்றதா என்றால் முடிவதில்லை. !
குறிப்பாக அன்றைய தினம் அதிக அளவில் ATM கள் வேலை செய்யாது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ,வேறு எந்த ATM வேலை செய்கின்றதோ அங்குதானே பணம் எடுக்க முடியும்.
ATM ல் பணம் நிரப்புவது தனியார் பொறுப்பாம்.!
அப்ப ATM வேலை செய்யாதது யார் பொறுப்பு. ??
ஒரு வேளை இதர ATM கள் சம்பாதிக்கட்டும் என விட்டுவிட்டு ஏதாவது கமிஷன் பெறுகின்றதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
வருகின்ற மாதம் முதல் தேதியன்று , எந்தெந்த ATM கள் வேலை செய்யவில்லை என புகைப் படம் எடுத்து வலைத்தளங்களில் பதியுங்கள்.
அந்தந்த வங்கிகளின் ATM குறித்து வங்கிகளின் மண்டல மேலாளருக்கு மெயில் அனுப்பலாம்.
பிறகு , சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தீர்வு காணலாம்.
பிறகு , சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தீர்வு காணலாம்.
தரங்கெட்ட - பொறுப்பற்ற வங்கி நிர்வாகம் நிறைய இருக்குது.
RBI க்கு இதெல்லாம் தெரியுதோ இல்லையோ. ?
No comments:
Post a Comment