Sunday, November 3, 2019

கருணாநிதியின் சிறப்பு வேர்கடலைசெடி முழுதாக இருக்கும் அடியில் வேர்கடலை இருக்காது.

கருணாநிதியுடன் ஒப்பிடும்போது மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "வரும் 10-ம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம். தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசி முடிவெடுக்கப்படும்.
தி.மு.கவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். பாவம் திமுக சகோதரர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அதே சமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை மிக்கவராக தெரிகிறார்.
தொண்டர்கள் தயாராக இருந்தால் நான் தனித்து போட்டியிடுவேன். ஏற்கனவே ஜெயலிதா இருக்கும்போது கூட்டணியில் இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிமுகவுடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
ரஜினிக்கு சிறப்பு விருது மத்திய அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அவரை பாஜகவில் இழுப்பதற்கான முயற்சி என சிலர் கருத்து கூறுகின்றனர். அது அவர்களின் கருத்து. ரஜினி, கமல் இரண்டு பேரை ஒப்பிடும்போது ரஜினி சிறப்பான நடிகர் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று கேட்க முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு கமலுக்கு கொடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...