Thursday, November 21, 2019

வடகிழக்கு பாரதம்...

அருணாசல பிரதேசத்தின் கவர்னர் PB ஆச்சார்யா கூறினாராம்.. இந்தியர்களுக்கு வடகிழக்கு மாநிலங்களைவிட அமெரிக்காவைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று.
ஆம்.. அவர் கூறியது உண்மைதான். நம்மில் மிகச் சிலருக்கு மட்டுமே வடகிழக்கு மாநிலங்களின் பெயர்களும் அதன் தலைநகரங்களும் தப்பில்லாமல் தெரியும்.
இதோ இங்கே வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி சில ஆச்சர்யகரமான செய்திகள்.
1)🚩வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம் எட்டு. அவை.. அருணாசல பிரதேஷ், மீஸோரம், அஸ்ஸாம், மணிபூர், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, த்ரிபுரா.
2)🚩இங்கு மொத்தமாக 220 மொழிகள் பேசப்படுகின்றன. அவைகள் அனைத்துமே பெரும்பாலும்.. திபெத்திய, சௌத் ஈஸ்ட் ஆசியா மற்றும் கிழக்கிந்திய கலாசாரத்தைப் பின்பற்றியே உள்ளது.
3)🚩இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் மட்டுமே முகலாய மன்னர்களால் கைப்பற்ற முடியாத பகுதியாக இருந்தது.
4)🚩இந்திய சரித்திரத்திலேயே 600 ஆண்டுகள் தொடர்ந்து வடகிழக்குப் பகுதிகளை ஆண்டுவந்த ஒரே சாம்ராஜ்யம் அஹோம் வம்சம் மட்டுமே.
5)🚩உலகத்திலேயே ஓடும் ஆற்றில் இருக்கும் மிகப் பெரிய தீவான மஜூலியும்.. மிகச் சிறிய தீவான உமாநந்தாவும் இருப்பது இந்த வடகிழக்குப் பகுதியில்தான்.
6)🚩இந்தியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த 7 தேசிய பூங்காக்கள் இருப்பது இந்த வடகிழக்கு மாநிலங்களில்தான்.
7)🚩மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கை ராக் கேபிடல் ஆப் இந்தியா என்று கூறுவர்.
8)🚩உலகத்திலேயே எப்போதுமே ஈரமான இடம் ஒன்று உண்டென்றால் அது மேகாலயாவில் உள்ள மௌஷின்ரம் என்னுமிடமாகும் இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
9)🚩அஸ்ஸாமிலுள்ள ஷால்காச்சி என்னுமிடத்தில்தான் உலகத்திலேயே மிகப் பெரிய நெசவு கிராமம் உள்ளது. இங்குள்ள மொத்த மக்களுமே பட்டு நெசவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
10)🚩மௌலின்னான்ங் என்னும் மேகாலயாவில் உள்ள கிராமமே ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமாகும்.
11)🚩தேசத்தில் மலரும் ஆர்ச்சிட் என்னும் புஷ்பத்தில் 70% வடகிழக்கு மாநிலங்களில்தான் விளைகின்றன.
12)🚩மீஸோரம், திரிபுரா மாநிலங்களே இந்திய அளவில் நிறைய படித்த மக்கள் வாழும் மாநிலமாகும்.
13)🚩வடகிழக்கு மாநிலங்களில் எங்குமே வரதட்சணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்னும் புகழ் பெற்றது.
14)🚩சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுல்லா பாஸ் என்னுமிடம் சைனாவின் பார்டர். 14,100 அடி உயரமான இந்த இடம் தற்போது ஒரு சிறந்த சுற்றுலாதலம்.
இவர்களது மிகப் பெரிய வருமானமே சுற்றுலாவிலிருந்து தான்..!
காணக்கிடைக்காத இயற்கையை இங்கு சென்று கண்டுகளிக்கலாம்..!நாம் இந்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...