மதுரை--ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்,பரமக்குடி,சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ முன்பாகவே வலதுபக்கமாக பிரிந்து தூத்துகுடி சாலையில் சென்றால், 'உத்திர கோச மங்கை' எனும் ஊர் உள்ளது.
இந்த ஊர் இலக்கிய சிறப்பும்,இதிகாச பெருமையும் உடையது.இந்த ஊரில் உள்ள நடராஜரே ஆதி நடராஜர் என சொல்லப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ராமாயண காலத்தில் மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிப்பட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாகவும்,இக் கோயிலில் உள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளதாகவும், மாணிக்க வாசகர் அதிகநாள் இந்த ஆலயத்தில் தங்கியிருந்ததாகவும்,(மாணிக்க வாசகர் காலம் 2-ம் நூற்றாண்டு) சங்ககால' இலவந்திகைப்பள்ளி'என்பது,இக்கால இந்த உத்திர கோச மங்கை எனவும்,இக்கோயிலின் தல மரம் இலந்தை'இலவந்திகை' எனும் சொல்லே மருவி இலந்தை எனவும்,இங்குள்ள தலவிருட்சம் 3000-ம் ஆண்டு பழமையானது எனவும் கூறுகி்னர்.
சிவனுக்கு வழிப்பாட்டுக்கு உகந்ததல்ல என்று கூறப்படும் தாலம்பூ இங்கு சாத்தப்படுகிறது.
இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இறைவன் மங்கள நாதர்.இறைவி மங்கள நாயகி.
உட்பிரகாரம் நுழையும் பொழுது, அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில்,இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது.கையை நுழைத்து அந்த பந்தை நகர்த்தமுடியும்.
ஐந்தரை அடி உயரம்-முழுவதும் விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதத் திருமேணி நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.
இங்குள்ள ஆடல் வல்லானுக்கு நித்திய அபிஷேகம் கிடையாது.மார்கழித் திருவாதிரை அன்று ஒரு நாள் மட்டுமே நடராஜருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு இரவு அபிஷேகங்கள் நடைப்பெறும்.அன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும்.ஆருத்திர தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆருத்திர தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.
எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால்தான்,இஸ்லாமியர்,ஆங்கிலேயர் என்று எத்தனையோ படையெடுப்புகள் நடந்த போதும்,இது மரகதம் என்று அவர்களுக்கு தெரியாமல் போனதால்தான் இன்று நமக்கு அருட்காட்சிப்படுகிறது என்று கூறுகின்றனர்.
விருப்பாச்சி சேர்த்து ஏழு அடி உயரம்.
மரகதக்கல் ஒலிக்கே உதிரும் என்னில்,செதுக்கும் உளிக்கு முன் எப்படி தாங்கியது?
உலகிலேயே மிகப் பெரிய மரகதகல் சிலைவடிவில்,நடராஜப் பெருமானின் அருட் சீவ ஔி சிந்த ஆடும் திருகாட்சியை வாழ்க்கையில் ஒருமுறையாவது நேரில் கண்டு தரிசித்து வாருங்கள்....
(தரிசித்தவர்கள்?பாக்கியவான்கள்.)
No comments:
Post a Comment