ஒட்டுமொத்த இந்தியாவிலும் அரசிற்கு எதிராக எப்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதம் பேசும் அனைவரும் ஆடிப்போய் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
இவை அனைத்திற்கும் காரணம் இஸ்ரேல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான “பெகாசஸ் ஸ்பைவார்”. இந்த பெகாசஸ் ஸ்பைவேர் என்பது ஒருவரின் மொபைலில் நுழைந்துவிட்டால் அனைத்து தகவலையும் ஒரு நிமிடத்திற்குள் சேகரித்துவிடும் என்று வாட்ஸாப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள பெகாசஸ் நிறுவனம், தாங்கள் தனி நபர்களுக்கு இந்த உளவுபார்க்கும் மென்பொருளை விற்கவில்லை என்றும், நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து தற்போது பலர் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தனியார் தொலைக்காட்சியிலும் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளார்கள்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வசம் இந்தியாவிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் மற்றும் பிரிவினையை சமூகவலைத்தளங்களில் பரப்புவர்கள் உள்ளிட்ட அனைவரின் தகவலும் விரல் நுனியின் உள்ளதாம்.
எங்கெல்லாம் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற அனைத்து தகவலும் NIA எனப்படும் தேசியபாதுகாப்பு அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாம். சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சோதனை கூட அதனை ஒட்டியதுதான் என்று கூறுகிறார்கள்.
மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பணியாற்றி வருகிறார். தற்போதுவரை நாட்டில் மிகப்பெரிய சாதனைகள் காஷ்மீர் மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது முதல் அவரின் பங்களிப்பு அதிகமுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்காக எந்த நிலைக்கும் மோடி செல்வார். அது சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும், அதனை தாண்டியதாக இருந்தாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் இந்திய உளவு அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு நாம் எந்த நிலைக்கும் செல்லலாம் என்று தோவல் கூறியிருந்தார்.
தற்போது ஒரே ஆப் மூலம் ஒட்டுமொத்த கும்பலுக்கும் ஆப்பு வைத்துவிட்டது மோடி அரசு. சமூக செயற்பாட்டாளர் பானு கோம்ஸ் போன்றவர்கள் கூட இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நக்சல் ஆதரவு அமைப்புகள், போராளிகள், தொடர்புடைய சில வக்கீல்கள், பிரிவினைவாதிகள் ஆகியோர் இது குறித்து அச்சமடைந்திருக்கிறார்கள் என்பது அவர்களது பேட்டிகளில் தெரிகிறது.
Artificial Intelligence வெகுவாக வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில்…இதுபோன்ற spyware-களின் ஆதிக்கத்தை தடுப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அதிகாரபூர்வமாக எந்த மென்பொருளையும் வாங்கவில்லை என்று கூறிவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விரைவில் மோடி சொன்ன புது இந்தியா நினைவாகப்போகிறது.. !
ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!
பாரத் மாதா கி ஜெய்..!
No comments:
Post a Comment