கொள்ளிடம் ஆற்றங்கரையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை போதை கும்பல் மிரட்டியதில், இன்ஜியரிங் மாணவர் ஆற்றில் குதித்து மாயமானார். அஅந்த மாணவரின் பை, புத்தகம் ஆகியவை மீட்கப்பட்டது. தொடர்ந்து, மாணவனை தேடும் பணி நடந்து வருகிறது.
திருச்சி, டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில், நேற்று (அக். 30) மதியம் 3:00 மணிக்கு, காதல் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு, இருவர் மது குடிக்க வந்துள்ளனர். காதல் ஜோடியை பார்த்ததும், 'இங்கு என்ன செய்கிறீர்கள், யார் நீங்கள், உங்கள் பெற்றோர் யார்' என, கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், காதலனின் சட்டையை பிடித்து அடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களிடம் இருந்து திமிறி விடுபட்டு, கொள்ளிடம் ஆற்றில் குதித்து விட்டார். இதையடுத்து, மிரட்டிய இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஓடிச் சென்று, கொள்ளிடம் போலீசில் தகவல் தெரிவித்தார்.

திருச்சி சமயபுரம் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டிய கஞ்சா போதை வாலிபர்கள், காதலியை சில்மிஷம் செய்தனர். தட்டி கேட்ட காதலனை அடித்து ஆற்றில் வீசியதில், நீரில் மூழ்கி மாயமானார்.
ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் இறங்கி, வாலிபரை தேடி வருகின்றனர். 20 வயதான இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ஆற்றில் குதித்தவர், துறையூரைச் சேர்ந்த ஜீவித், 20, என்பதும், திருச்சி அண்ணா பல்கலையில், மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பவர் என்பதும் தெரிந்தது. ஆற்றில் குதித்த அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த மாணவரின் பை, புத்தகம் ஆகியவை மீட்கப்பட்டது. தொடர்ந்து, மாணவனை தேடும் பணி நடந்து வருகிறது.
அந்த இளம்பெண், புலிவலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருச்சி காவேரி பெண்கள் கல்லுாரியில், எம்.ஏ., படிப்பதும் தெரிந்தது. காதலர்களை மிரட்டிய, தேவிமங்கலம் கலையரசன், 22, புள்ளம்பாடி கோகுல், 22, ஆகிய இருவரை, போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மெத்தனம்
கொள்ளிடம் பாலத்தின் முதல், 13 பாலக் கட்டைகள், ஸ்ரீரங்கம் போலீஸ் லிமிட்டில் வருகிறது. மற்ற, 12 கட்டைகள், கொள்ளிடம் போலீஸ் லிமிட்டில் வருகிறது. மாணவர் ஆற்றில் குதித்த இடம், ஐந்தாவது பாலக்கட்டை என்பதால், ஸ்ரீரங்கம் போலீசார் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், ஸ்ரீரங்கம் போலீசார் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை.
No comments:
Post a Comment