Friday, November 1, 2019

புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு: அ.தி.மு.க., பலம் 125 ஆக உயர்வு.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவியேற்றனர். சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 125 ஆக உயர்ந்துள்ளது.

விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. சபாநாயகர் தனபால் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
MLA,A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,எம்.எல்.ஏ.,பலம்,125,உயர்வு

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றதும் சபாநாயகர், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இரு எம்.எல்.ஏ.க்களும் முதல்வரின் காலை தொட்டு வணங்கினர். சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 123 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தற்போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க.விற்கு 100 எம்.எல்.ஏ.க்கள் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு ஏழு மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தினகரன் உள்ளார்.

ஜெ. நினைவிடத்தில் முதல்வர் மரியாதை:
அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பதற்கு முன் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நேற்று காலை 8:30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் சென்றனர். அங்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மலர் வளையம் வைத்தும் மலர் துாவியும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களும் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதன்பின் அனைவரும் எம்.ஜி.ஆர். நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...