Saturday, November 16, 2019

ஐஐடி மாணவி தற்கொலையில் மத சாயம் பூச முயன்றவர்களின்உண்மை நிலை வெளியானது!

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். (வயது 18). இவர் சென்னை ஐஐடியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் மாணவி பாத்திமா லத்தீப், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவி பாத்திமா லத்தீப், மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதற்கிடையே பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், பாத்திமா லத்தீப்புக்கு பரீட்சையில் குறைவான மதிப்பெண் வழங்கியதாகவும், அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஒருவேளை இதில் உண்மை இருப்பதாகவே எடுத்துக்கொண்டாலும், பரீட்சை சரியாக எழுதாத மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் மதிப்பெண் குறைவாக வழங்குவது நடைமுறையில் உள்ளதுதான். ஒரு மாணவிக்கோ அல்லது மாணவருக்கோ ஒரு ஆசிரியர் வேண்டுமென்றே குறைவான மதிப்பெண் வழங்கினார் என்றால், அது தவறுதான். அந்த குறிப்பிட்ட விடைத்தாளை வேறு பேராசியரிடம் சரிபார்க்க வைத்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
ஆனால் மாணவி பாத்திமா லத்தீப், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் இந்து என்பதாலும் இதனை மதரீதியான சம்பவமாக மாற்றுவதில் திமுக கூட்டணி கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதனை முதலில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போன்றவர்களைக் கொண்டு தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கம்யூனிஸ்டுகளும், மற்ற உதிரி கட்சியினரும் தொடர்ந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, அல்-ஜஸீரா என்ற முஸ்லிம் தீவிரவாத டிவியால் நடத்தப்படும் மக்டூப் மீடியா முதல் உள்ளூர் இந்து எதிர்பாளர்கள் ஓரணியில் இணைந்து மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையை மதக்கலவரமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அவரகள் இந்த மாணவியின் தற்கொலைக்கு பேராசியர் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கராக், மிலிண்ட் பிராக்மே ஆகியோர்தான் காரணம் என்று தீர்ப்பு வாசிக்க தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இவையாவும் திமுக கும்பல்களின் விஷம பிரச்சரங்களை சார்ந்தே உள்ளன.
ஆனால் இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த “தி சவுத் ஆசியன் எக்ஸ்பிரஸ்”, களத்தில் இறங்கி விசாரணை நடத்தியது.
அவர்கள் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில்,”மாணவி பாத்திமா லத்தீப்பின் கல்வி, 4 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கி உள்ளது. எனவே அவர் இன்னும் ஒரு பருவத்தைகூட (Semester) முடிக்கவில்லை. எனவே பேரசியர்கள் மீதான புகார்கள் முற்றிலுமாக ஆதாரமற்றவை. மேலும் சென்னை ஐஐடியில் இஸ்லாமிய வாசகர் வட்டம், கத்தோலிக்க குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் முழு சுதந்திரத்துடன் தங்களின் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் இந்து மதம், ஜைன மதம் மற்றும் பிற மதங்களுக்கு இதுபோன்ற அமைப்புகளே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர் அஜ்மல் உசைன்,”நான் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவன். சென்னை ஐஐடி வளாகத்தில் எந்தவிதமான முஸ்லிம் விரோத சம்பவங்களும் நடக்கவில்லை. இங்கு முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உள்ளது போன்ற பொய் பிரச்சாரங்களை யாரும் பரப்ப வேண்டாம். தகுந்த ஆதாரம் இல்லாமல் மதசாயம் பூச வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இது ஏதோ ஆர்எஸ்எஸ்காரர்கள் சதி செயலில் ஈடுபட்டு, அதனால் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது போன்ற பிரச்சாரத்தில் திமுக கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. பேராசியர் சுதர்சன் பத்மநாபன், ஆர்எஸ்எஸ்சுக்கு எதிரான கருத்துடையவர். அவருக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் இம்மியளவும் தொடர்பில்லை. மிலிண்ட் பிராக்மே, கம்யூனிஸ்ட் சிந்தனையாளர். அவரும் முழு நேர ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர். ஹேமச்சந்திரன் கராக், ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதன் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளையும், இந்து மதத்தையும் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையோடு முடிச்சு போட்டு, மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயன்ற திமுக கும்பல்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிணத்தை வைத்து அரசியல் செய்வது திமுகவிற்கு ஒன்றும் புதிது அல்ல. அதில் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அனிதாவாக இருக்கட்டும் அல்லது சமீபத்தில் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் சுஜித் ஆக இருக்கட்டும், பிணம் விழட்டும் என்று காத்திருப்பதில் திமுகவிற்கு நிகர் திமுகதான்.
நன்றி - Kathir News
இந்த பெண்ணின் தாய் திமுக எழுதி கொடுத்தபடி அறிக்கை விடுகிறார்
இது தமிழ் நாட்டில் ‌மதக்கலவரம்
ஏற்படுத்தும் ஒரு முயற்ச்சியே
திமுகவின் பங்கு இதில் அதிகம் இருக்கிறது! மத்திய/மாநில அரசுகள் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் இது போன்ற
தேவையற்ற விஷயங்கள் மூலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...