உதயகுமார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர். 1971-இல் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்வ கோளாறால் ஒரு கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். மேலும் பல்கலைக்கழக வளாகத்தின் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து, அதன் கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதி எழுதினர். இது கருணாநிதியின் கவனத்திற்கு வந்தும் கண்டுக்கொள்ளாது மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, காவல்படை பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு, பட்டமும் பெற்றுக் கொண்டார்.
அடுத்த நாள் மாணவர் உதயகுமார் பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவல்துறையினர் தாக்குதலில் பலியானார் என்ற ஆதாரமற்ற வதந்தி நிலவியது. இறந்த உதயகுமாரின் பிணத்தைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்ற வாக்குமூலத்தை உதயகுமாரின் தந்தை பெருமாளிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர். காவல்துறையினர் அத்துடன் மாணவர் உதயகுமார் இறந்ததாக கூறப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்ததது என அறிக்கை விட்டது. பல்கலைக்கழக வளாகக் குளத்தில் இறந்தது மாணவர் உதயகுமார் இல்லை எனில், இறந்த நபர் யார் என்ற விவரம் காவல்துறை விசாரணை நடத்தவில்லை. எனவே மாணவர் உதயகுமார் இறப்பின் சர்ச்சை இதுவரை தொடர்ந்து தொடர்கிறது.
சாவு எல்லாம் திராவிடர்களுக்கு ஜூஜூபி .
அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
சர்வாதிகாரியாக மாறுவேண்டா!!
சர்வாதிகாரியாக மாறுவேண்டா!!
No comments:
Post a Comment