Sunday, November 17, 2019

உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.:


இனிப்பு, கசப்பு, துவர்ப்பு எல்லாம் சேர்த்து ஒருவித புளிப்பு என்று நான்கு வித சுவைகளையும் தன்னுள் அடக்கியிருக்கும் நெல்லிகனி ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. இன்று ஆயுர்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நெல்லிக்கனி சுஸ்ருதராலும், சரக ரிஷியாலும் பயன்படுத்தப்பட்டது என்பதை புராணங்கள் வாயிலாக அறியலாம். அரிநெல்லி மற்றும் காட்டுநெல்லி அல்லது பெருநெல்லி என்று இருவகை நெல்லி உண்டு.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் நெல்லிக்கனி. முதுமையைத் தள்ளி போடும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு. வைட்டமின் சி நிறைந்த நெல்லியில் நீர் 82%, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்திருக்கிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் இயக்கங்களும் நெல்லிச்சாறில் சீரடைகிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நெல்லிக்கனியானது அழ கைப் பராமரிப்பதிலும் குறிப்பாக கூந்தலைப் பராமரிக்கவும் கைகொடுக்கிறது என்பதில் ஐயமில்லை.
நெல்லியைச் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்து சாறு பிழிந்து சிறிது தேன் சேர்த்து குடித்துவந்தால் உடலில் கணிசமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் முதன்மையானதாக நெல்லி செயல்படுகிறது.
கோடையில் தாகம் தீர்வதற்கு செயற்கை குளிர்பானங்களைத் தேடுவோம். ஆனால் நெல்லிமோர் தாகம் தீர்ப்பதோடு சுவையையும் நீட்டிக்கிறது. எளிதில் செரிமானத்தையும் உண்டாக்குகிறது. தினமும் நெல்லிமோர் குடித்தால் உட லில் உள்ள அதிக உஷ்ணம் குறைந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். எப்படி செய்வது நெல்லி மோர்.
தேவையான பொருட்கள்.:
தயிர் -1 பெரிய கப்,
நெல்லிக்கனி -6,
இஞ்சி - சிறுதுண்டு,
சீரகம்- கால் டீஸ்பூன், பெருங்காயம் - சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலைகள் - அரை கப், உப்பு - தேவைக்கு,
காரம் தேவையெனில் பச்சைமிளகாய் - சிறியது 1.
செய்முறை.:
தயிரை கடைந்து மோராக்கவும். நெல்லிக்கனியைக் கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிவைக்கவும். மிக்ஸி யில் நறுக்கிய நெல்லி, இஞ்சி, சீரகம், பெருங்காயம் சுத்தம் செய்த இலைகளைச் சேர்த்து மைய அரைத்து (காரம் தேவையெனில் பச்சை மிளகாய் சேர்த்து) மோரில் கலந்து உப்பு சேர்த்து பரிமாறவும். தேவையெனில் ஐஸ்கட்டிகளைச் சேர்க்க லாம்.
அருமையான சுவையில் இருக்கும் நெல்லி மோர் குழந்தைகளும் பெரிய வர்களும் விரும்பி குடிப்பார்கள். குளுமை அதிகம் என்று சொல்பவர்களும் தயக்கமில்லாமல் குடிக்கலாம். இஞ்சியும் சீரகமும் சேர்ப்பதால் குளுமை தாக்காது. மாறாக செரிமானத்தைத் தூண்டி பசியை அதிகரிக்கச்செய்யும். ஆரோக் யமாகவும் வைத்திருக்கும். செய்து பாருங்களேன்.. சுவையை சுலபத்தில் மறக்கமாட்டீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...