Thursday, January 2, 2020

தமிழக கிராம புறங்களில் அதிமுக செல்வாக்கு குறைந்து விட வில்லை.

6 மாதத்திற்கு முன் 38 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றிய திமுகவிற்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரிதும் ஏமாற்றமாக தான் இருக்கும். 8 ஆண்டுகள் அதிமுக அரசு மாநிலத்தில் கோலோச்சி வந்தாலும் அது திமுகவிற்கு நிகராக வாக்குகளை பெற்றுள்ளது வரும் சட்டமன்ற தேர்தல்களம் அவ்வளவு எளிதாக எந்த கட்சிக்கும் அமையாது என்பதனை கட்டியம் கூறுவதோடு அல்லாமல் இத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு புத்துணர்வு அளிப்பதாகவும் உள்ளது. தமிழக கிராம புறங்களில் அதிமுக செல்வாக்கு குறைந்து விட வில்லை என்பது ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. இதில் ரஜினி தேர்தல் களத்தில் புகுந்தால் ஏற்பட கூடிய மாற்றம் யாராலும் கணிக்க முடியாத ஒரு புதிராக அமையும். அவர் பெற போகின்ற ஓட்டுகள் அவரை வெற்றி பெற வைக்குமா அல்லது திமுக, அதிமுக ஓட்டுகளை பிரிக்கும் அனுகூல சத்ருவாக அமையுமா என்பது போக போக தான் தெரியும். திமுகவினர் இந்த வெற்றியை உண்மையில் கொண்டாட வேண்டிய ஒன்றா என்பதை யோசிக்க வேண்டிய நேரமிது பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்து பார்த்தால் இவர்கள் குறைந்தது தற்பொழுது பெற்ற சீட்களை விட குறைந்தது இரண்டு மடங்கு கூடுதல் சீட்களை பெற்றிருக்க வேண்டும் திமுகவின் தற்பொழுதைய செயல்பாடுகள் பொதுமக்களின் விருப்பத்தை பெரும்பாலும் பெறவில்லை என்பதே இதை காட்டுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...