Saturday, June 13, 2020

இன்று உலக ரத்த தான தினம் (14/06/2020).

ரத்த தானத்தின் அவசியம் பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 14-ல் உக ரத்த தானம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான ரத்தம் : பாதுகாப்பான வாழக்கை என்பது இந்தாண்டு மையக்கருத்து.
விபத்து , ஆப்பரேஷன் போன்ற ஆபத்தான தருணங்களில் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் வழங்கும் ரத்தம், பிறர் உயிர்காக்கப்பயன்படுகிறது என்பதை நினைவில் நிறுத்தி, அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வே்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உடல் நலமாக உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவை சேதனை செய்யப்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு ரத்ததானம் வழங்கலாம். இது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும். தானாக ரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் வழங்கும் ரத்த பிளாஸ்மா மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.

12


உலகளவில் 12 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதில் 40 சதவீதம் அதிக வருமானமுடைய நாடுகளை சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...