Thursday, June 18, 2020

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: இந்தியா வெற்றி.

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின், தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில், 184 நாடுகளின் ஆதரவுடன், இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த சக்தி வாய்ந்த பதவியில், இந்தியா நீடிக்கும்.
ஐ.நா., சபையில் உள்ள அமைப்புகளில் மிகவும் சக்தி வாய்ந்தது, பாதுகாப்பு கவுன்சில். சர்வதேச விவகாரங்கள், உடன்பாடுகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை, இந்த கவுன்சில் தான், விவாதித்து முடிவை அறிவிக்கும்.

போட்டியிடவில்லை


இதில் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை உள்ளன. இதுதவிர, 10 நாடுகள், தற்காலிக உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. இவற்றின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். நம் நாடு, ஏற்கனவே, ஏழு முறை, இந்த பதவியில் அங்கம் வகித்துள்ளது. இந்நிலையில், இந்த பதவிக்கான ஐந்து இடங்கள் காலியானதை அடுத்து, அவற்றுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் இரவு, நியூயார்க்கில் உள்ள ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது.

ஐந்து இடங்களுக்கானதேர்தலில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு, இந்தியா, டிஜிபோட்டி, கென்யா ஆகிய நாடுகள் களத்தில் இருந்தன. ஆனால், முதல் சுற்று தேர்தலில், டிஜிபோட்டி, கென்யா நாடுகளுக்கு, மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் கிடைக்காததால், இறுதிச் சுற்றில் அவை போட்டியிடவில்லை.இந்நிலையில், நேற்று நடந்த இறுதிச் சுற்றில், மொத்தம் உள்ள, 192 உறுப்பு நாடுகளில், 184 நாடுகளின் ஆதரவுடன், இந்தியா அபார வெற்றி பெற்றது. மற்ற பிராந்தியங்களுக்கான தேர்தலில், அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. இந்த நாடுகள், வரும் ஜனவரி துவங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த
பதவியில் நீடிக்கும்.

பலத்த பாதுகாப்பு


இதேபோல், ஐ.நா., தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலும், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர், 69, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வரும் செப்டம்பரில் துவங்கி, அடுத்த ஒரு ஆண்டுக்கு, இவர், ஐ.நா., சபை தலைவராக பதவி வகிப்பார். தற்போதைய தலைவரான நைஜீரியாவைச் சேர்ந்த டிஜானி முகமதுவின் பதவிக் காலம் செப்டம்பரில் முடிவதை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நேற்று பலத்த பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. ஓட்டளிக்க வந்திருந்த பிரதிநிதிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். சமூக விலகல்நடைமுறையும் பின்பற்றப்பட்டது.ஓட்டளிப்பதற்காக பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கும்விதமாக, ஒவ்ெவாரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, அந்த நேரத்தில் வந்து ஓட்டளிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு கவுன்சிலில் வெளிப்படை


இந்திய பிரதிநிதி திருமூர்த்தி நம்பிக்கைஇந்தியாவுக்கு கிடைத்துஉள்ள வெற்றி குறித்து, ஐ.நா., சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது:உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது நம்பிக்கை வைத்து, பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்த, சர்வதேச சமுதாயத்துக்கு நன்றி. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் இந்தியாவின் சேவை தொடரும். பாதுகாப்பு கவுன்சிலில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும்.பிரதமர் மோடி, சர்வதேச ஆளுமையாக திகழ்கிறார். இந்த வெற்றி, அவரது திறமைக்கு கிடைத்த சரியான அடையாளம். உறுப்பு நாடுகளுடன், இந்தியா வைத்துள்ள நட்புறவுக்கு சாட்சியாகவும், இந்த வெற்றியை கருதலாம். சர்வதேச அளவில், நெருக்கடியான சூழல் நிலவும் நிலையில், இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றியை அடைவதற்காக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கடுமையாக உழைத்தார். இதற்கு முன், 2011 - 12ல், இந்தியா, தற்காலிக உறுப்பினராக அங்கம் வகித்தது.
தற்போது சிறிய கால இடைவெளிக்குப் பின், மீண்டும் இந்த பதவி கிடைத்துள்ளது. இந்த குறுகிய இடைவெளியில் உலகில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு ஏற்ற வகையில், இந்த பதவியை இந்தியா பயன்படுத்தும்.அனைத்து உறுப்பு நாடுகளுடனும்,இணக்கமாகவும், நட்புறவுடனும் செயல்படுவது தான், எங்களின் நோக்கம். கடந்த காலங்களில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இதை பின்பற்றுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.



ஓட்டளித்த நாடுகளுக்கு நன்றி!


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாவதற்கு இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி. உலகில் அமைதி, பாதுகாப்பு, சமநிலை ஏற்படுவதற்கு,
மற்ற உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, இந்தியா தீவிரமாக பணியாற்றும். நரேந்திர மோடி, பிரதமர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...