ஒரு தகப்பன் தன்னுடைய அழுது கொண்டிருக்கும் குழந்தையை பொம்மைகள் விற்கும் கடைக்குள் கூட்டிப் போனார்.
அங்கே உள்ள பொம்மைகளில் ஒன்றை அவர் எடுத்துப்பார்ப்பதை கவனித்த குழந்தை தனக்கு பொம்மை கிடைக்கப் போகிறது என்ற எண்ணத்தில் அழுகையை நிறுத்தியது.
பொம்மையைப் பார்த்த தந்தை அது மேட் இன் சைனா என்று போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு பொம்மையை இருந்த இடத்திலேயே வைத்து விட்டார். குழந்தை மீண்டும் பலமாக அழத் துவங்கியது.
கடைக்காரர் சார் உங்கள் குழந்தையின் அழுகையை விட பொம்மை எங்கே செய்யப்பட்டது என்ற விஷயம்தான் முக்கியமா எனக் கேட்டார்.
அதற்கு குழந்தையின் தந்தை *"எனது குழந்தையின் மூன்று நிமிட அழுகையை விட எனது நாட்டுப் போர்வீரனின் குழந்தையின் நிரந்தர அழுகை மிகவும் முக்கியமானது"* எனக் கூறி குழந்தையுடன் வெளியேறினார்.
No comments:
Post a Comment