Saturday, June 6, 2020

'குளோப் தியேட்டர் ஊழல்''

அண்ணாசாலையில் இருக்கும் குளோப் தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது.
இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.
குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன்.
ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வரவு 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினான்காயிரம்.
வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.
*
வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை இதனை தக்க வைக்க, 'எனக்கே விற்று விடுங்கள்' என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்.
இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது.
உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.
*
இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை அன்றைய ஆட்சியாளர்களை சந்திக்க விரும்பினார்.
அதற்காக அன்றைய திமுகவின் அதிகார மையமாக விளங்கிய முரசொலி மாறனை அணுகுகிறார்.
அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார்.
உடனே வரதராஜ பிள்ளை அமைச்சர் ப.உ.சண்முகத்தை அணுகி இதற்கான தீர்வு என்ன என்று கேட்கும் போது அவர்,
''சட்டதிருத்தம் கொண்டு வந்து உங்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு செய்கிறோம். அதற்காக சில லட்சங்கள் தேவைப்படுகிறது'' என்றார்.
அதற்கான முன் பணமாக அன்றைய மதிப்பில் ரூ 30000 கொடுக்கப்படுகிறது.
பின்னர் முதலமைச்சர் கருணா நிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அவரை சந்திக்க சென்ற வரதராஜபிள்ளையிடம் கருணாநிதி பேரம் பேசுகிறார். பின்னர் சில பல ஆயிரங்கள் கைமாறுகின்றன.
*
இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
அது தான்...,
நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர் உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான #தமிழ்நாடு_குத்தகைதாரர்_சட்டம்.
இந்த சட்டம் உடனடியாக
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு...
குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு....
அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று, நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் குளோபல் தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது.
இதை சர்க்காரிய கமிஷன் தன் விசாரணை அறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது.
Allegation No.15 - New Globe Theatre - https://othisaivu.wordpress.com/2011/05/17/post-36/

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...