எவ்வளவு பணம் லஞ்சம் என்று பேசி அட்வான்ஸ் தந்தாயிற்று. தலைவர் APPROVED என்று எழுதி கையெழுத்தும் போட்டுவிட்டார். மறுநாள் தருகிறேன் என்று சொன்ன பணம் வரவில்லை. அந்த கோப்பை வாங்கி NOT என்று APPROVED க்கு முன் எழுதினார். அது APPROVED இலிருந்து NOT APPROVED ஆனது. தகவல் போனது பணம் தந்தவருக்கு. அவர் அடித்து பிடித்துக்கொண்டு, என்ன தலைவரே, பணம் புரட்ட வேண்டாமா? இப்படி செய்துட்டீங்களே கோப்பில் இப்படி எழுதினால் என்ன செய்வது என்று என்றார். பணம் கொண்டு வந்தியா என்றார் தலைவர். இந்தாங்க என்று நீட்டினார். பெற்றுக்கொண்டு, அதே காகிதத்தை எடுத்து, அந்த NOT APPROVED க்கு அருகில் ஒரு E: போட்டார். அப்போது NOTE : APPROVED என்று ஆனது.
இதுதான் தலைவரின் ராஜதந்திரம்.
No comments:
Post a Comment