ஒரு கிரகத்தின் ஆதிபத்திய பலனை லக்னத்திற்கும் ராசிக்கும் சேர்த்துதான் பலன் கூறவேண்டும். ஆனால் லக்னம் முதன்மையாவும் ராசியை இரண்டாநிலையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலவேளைகளில் லக்னம் மற்றும் ராசியில் எதனுடைய வலு அதிகமாக இருக்கிறதென்று கணித்து அதற்கு முக்கியத்திவம் கொடுக்கிறார்கள்.
லக்னத்திற்கு 60 சதவீதம் என்றால் ராசிக்கு 40 சதவீதம் முன்னுரிமை தரலாம்.
மூலநூல்கள் லக்னம்,ராசி இரண்டிற்கும் சேர்த்துதான் பலன் அறியவேண்டும் என அறிவுறுத்துகின்றன. உதாரணமாக லக்னத்திற்கு ராசிக்கோ பத்தாமிடத்தோடு தொடர்புகொள்ளும் வலுவான கிரகங்களைக்கொண்டு பலன் கூறப்பட்டுவருகிறது.
உதாரணமாக சிம்மலக்னத்திற்கு சனி நல்லபலன் பொதுவாக தரமாட்டார். ஆனாலும் மகரம்,கும்பம் ராசியில் பிறந்து சனி ராசிநாதனாக இருந்தாலும் ரிசபம்,துலாம் ராசியில் பிறந்து ராஜயோகாதிபதியாக சனி ஆனாலும் மிதுனம்,கன்னி ராசியில் பிறந்து சனி யோகாதிபதியாகவும் ஆனாலும் லக்னத்திற்கும் ராசிக்கும் கேந்திரத்துக்கும் கோணத்திற்கும் அதிபதியாக ஆனாலும் நல்ல தீயபலன்களை தராமல் யோகபலன்களையே தரும். இது பொதுபலன். உங்களது ஜாதகத்தில் ஏதாவது பாவத்துவம் ஏற்பட்டிருந்தால் நல்ல பலன் தராது என்பதால் எல்லாவற்றையும் கவனித்தே பலன் கூறவேண்டும்.
ராயரின் பதிவுகளில் அதிகமாக லக்னத்திற்கும் ராசிக்கும் சேர்த்து பலன்கூறும் முறையை அதிகமாக பார்த்திருக்கிறேன். இந்த முறை சரிதான். லக்னமும் ராசியும் ஜோதிடத்தின் இருகண்களாகும்.
No comments:
Post a Comment