எனக்கு சாமி கும்பிட ரொம்ப பிடிக்கும்..
எல்லா சாமியும் வித்தியாசம் இல்லாமல் கும்பிடுவேன்..
கருப்பசாமி.. பிள்ளையார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி..சாய்மா... எல்லாரையும்... விழுந்து விழுந்து கும்பிடுவேன்.. எனக்கு மனசு கஷ்டமா இருந்தா அவங்க கிட்ட சொல்லிட்டா நிம்மதியாக ஆயிடும்
தர்கா உள்ள யாராவது கூட்டிட்டு போனா போக ஆசை..தர்கா வராண்டா வரை தான் அம்மா சின்ன புள்ளை ல மந்திரிச்சு கூட்டிட்டு வருவாங்க... அம்மா அப்பா வளர்ப்பு தான் சாதி மத பேதம் பார்க்காமல் வாழ முடிந்தது..முன்னலாம் சத்தமா மட்டுமே தெரிந்த பாங்கு தொழுகை அழைப்பு சூஃபியும் சுஜாதையும் மலையாள படம் பார்த்த பிறகு மெய் மறந்து கேட்க வைத்தது.தர்கா மேல் ரெண்டு கோபுரம் பார்த்து என் பிள்ளைகளை நீங்க தான் பார்த்துக்கணும் என்று கோரிக்கை வைப்பேன் தினமும்...
சின்ன பிள்ளையில் இருந்து காலேஜ் வரை கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூஷன் ல தான் படிப்பு மொத்தமும்... மதுரை செயின்ட் மேரீஸ் கோவில் மேரி மாதா ரொம்ப பிடிக்கும்.. குட்டி யேசுவை கையில் தூக்கி வச்சு இருப்பாங்க..யேசுவே மாதாவே சூசையப்பரே ன்னு சிலுவை இப்ப வரை எனக்கு பிள்ளைகளுக்கும் போட்டு விடுவேன்.. நெஞ்சில்...
சின்ன பிள்ளையில் அவ்வளவா உத்து பார்த்தது இல்லை ஆனால் சமீபத்தில் செயின்ட் மேரீஸ் சர்ச் ல மெழுகுவர்த்தி நேர்த்தி கடன் இருந்தது அப்ப போனப்ப கருணையான மேரி மாதா முகத்தை பார்த்து அழுதுட்டேன்...
மனுசர நம்பி சொல்லி அழுவதற்கு பதிலாக கடவுளை நம்பி கவலை எல்லாத்தையும் ஒப்படைத்து விடலாம் தானே...
No comments:
Post a Comment