Sunday, May 23, 2021

சட்டத்தின் படி அரசு பங்களாவில் இருக்க அவருக்கு அனுமதி உண்டு ....

 கருணாநிதி க்கு கூவத்தில் கூட இடம் தர மறுத்த எடப்பாடிக்கு, வீட்டையே ஒதுக்கியுள்ளது திமுக - உபி-க்கள் உளறல்.

எதிர்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்த்து உண்டு. அரசு வீடும் உண்டு. இது நாள் வரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் அம்மாவும் கருணாநிதியும் தான்.
இருவருமே சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுவா ஒதுக்கப்படும் அரசு வீடு ஒதுக்கப்பட அவசியமில்லாமல் போனது.
ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சென்னையைச் சாராதவர் என்பதால், பொதுவாக ஒதுக்கப்படும் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்ளோ தான்.
மற்றபடி இதுல, கருணை மழை பொழிந்த திமுக, ஆறடி ஒதுக்காத எடப்பாடிக்கு வீட்டையே ஒதுக்கிய என, அது இதுன்னு லாம் உருட்ட இதில் ஒன்றுமேயில்லை.
கொஞ்ச மேனும் அரசு நிர்வாகம் பற்றி புரிதலுடன் இருங்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் MLA பதவி பறிபோகும் என்ற விதியை, என் அப்பா கருணாநிதி க்கு மட்டும் தளர்த்தி விலக்கு கொடுத்து, இறக்கும் போது MLA அந்தஸ்தோடு இருக்க அனுமதிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்னு, ஸ்டாலின்,
அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கெஞ்சிய போது, சரிங்க இருந்துட்டு போகட்டும்ன்னு இறக்கும் போது, MLA வாகவே இருக்கட்டும்ன்னு விட்டார் பாரு, அது தான் ஒரிஜினல் கருணை.
திமுக அரசு இப்போது காட்டியிருப்பது கருணை அல்ல எதிர்க் கட்சி தலைவருக் கான உரிமை.!❣️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...