Sunday, May 23, 2021

உலகின் எந்த நாடும் இத்தகைய கொடூரக் குற்றவாளிகளை இவ்வளவு வருடங்கள் உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டார்கள்!

 வெடிகுண்டு தயாரிக்க வெறும் 9 Volt பேட்டரி வாங்கி கொடுத்ததற்காக இத்தனை வருடம் சிறையா.? அந்த பேட்டரி ராஜீவை கொலை செய்யப் பயன்படப் போகிறது என்று தெரியாமல் தான் வாங்கிகொடுத்தார். ராஜீவை கொலை செய்யும் சதித்திட்டம் சாந்தன் முருகன் தனு சிவராஜ் தவிர யாருக்கும் தெரியாது என்ற போது பேரறிவாளனுக்கு மட்டும் எப்படி தெரியும்.?’’ - இது தான் பேரறிவாளனை விடுதலை செய்ய சொல்றவங்க முன் வைக்கற கேள்விகள்..

பேட்டரி வாங்கி கொடுத்தது குற்றவாளிகளுக்கு தான்னு பேரறிவாளன் தரப்பே ஒப்புக்கொண்டுள்ளது. பேட்டரி கொடுத்ததுக்காக எல்லாம் ஜெயில்ல வெக்ககூடாதுன்னு சொல்றதுக்கு பேரறிவாளன் ஒண்ணும் பேட்டரி கடை சேல்ஸ்மேன் கெடையாது.. விடுதலைப்புலிகள் கூட நெருங்கிய தொடர்புல இருந்த மெக்கானிசம் படிச்சவன்.. ஏன் பேட்டரி எதுக்கு பேட்டரி அதுவும் 9 Volt பேட்டரி வெச்சு வெடிகுண்டு தயாரிக்கலாம்னு தெரிஞ்சவன் ( India today article) பேரறிவாளனை குறிப்பா இந்த வழக்குல சிக்க வைக்கறதுக்கு சிபிஐக்கு எந்த முன்விரோதமும் இல்லை.. அப்பலாம் புலிகளை வெளிப்படையா ஆதரிப்போர் சென்னைல அதிகம்.. அவங்களையெல்லாம் பிடிக்காம எதுக்கு பேரறிவாளனை இந்த வழக்குல கொண்டு வரனும்.?
சிபிஐ நெனச்சிருந்தா வைகோவையே குற்றவாளியாக்கிருக்கலாம்..மொத்த உலகமும் நம்பியி ருக்கும்..
பேரறிவாளன் குடும்பத்தை விட்டு தி.க திடல்ல விடுதலைப்புலிகள் கூட தங்கியிருக்கான். சாந்தன் முருகன் சிவராசன் தனு நளினி கூட அவனுக்கு நெருங்கிய தொடர்பும் கூட்டுச்சதி காலங்களில் ஒரே அறையில் இருந்ததும் உறுதியாயிருக்கு.. சுப்ரீம் கோர்ட் தெளிவா விசாரிச்சு தான் தீர்ப்பு வழங்கிருக்கு..
மரணதண்டனை ரத்து பண்ற வரைக்கும் இவர்கள் எந்த இடத்துலயும் தான் தப்பு பண்ணலேன்னு சொல்லாம தண்டனைய குறைச்சு குடுங்க போதும்னு தான் கேட்டுருக்கானுக.. இப்ப தப்பே பண்ணல விடுதலை பண்ணுனு நிக்கறானுக.. இவர்கள் மீது பரிதாபம் ஏற்படுத்தும் வேலைகளை கடந்த பலவருடங்களாக ஒரு கூட்டம் செய்து வருகிறது..
அந்த கூட்டம் தான் நளினியின் பெண்ணை லண்டனில் மருத்துவம் படிக்க வைக்கிறது.. அந்த கூட்டம் தான் அற்புதம் அம்மாளுக்கு படியளக்கிறது.. அந்த கூட்டம் தான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய கூட்டமும் கூட.. ராஜீவோடு இறந்த 15-க்கும் மேற்பட்டோர் மற்றும் கடுமையான உடல் உறுப்பு இழப்பு பாதிப்பு அடைந்த 60 க்கும் மேற்பட்டோர் ஆகிய அப்பாவிகளின் குடும்பம் இன்றும் நலிந்து கிடக்கையில் அதை பற்றி பேசாத கண்டுகொள்ளாத இவர்களின் காருண்யம் 7 குற்றவாளிகளுக்கு மட்டும் எங்கிருந்து பொங்கி வருகிறது.?
இவர்களை விடுதலை செய்தால் அதைவிட மொத்த நீதித்துறையையும் வேற எந்த விதத்தலயும் கேவலப்படுத்தவே முடியாது.. உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கும் ராஜிவ் குடும்பம் மன்னித்துவிட்டது. அதனால் விட்டு விடலாம் என சொல்வதற்கு இது குழாயடி சண்டையல்ல.. சட்டத்தில் Compoundable /non-compoundable என்று உள்ளது. பெட்டி கேசுகளுக்கு தான் காம்ப்ரமைஸ் ஆக முடியும். கிரிமினல் வழக்குகளில் அல்ல . கிரிமினல் வழக்குகளில் புகார் கொடுத்தவனே நினைத்தாலும் காம்ப்ரமைஸ் ஆக முடியாது. ஏனெனில் கிரிமினல் குற்றங்கள் அரசுக்கு எதிரான குற்றங்கள் ஆகும்.. இறந்தது சோனியாவின் கணவர் மட்டுமல்ல.. முன்னாள் பிரதமர் தேசத்தலைவர்..
மேலும் ராஜீவ் மட்டும் கொலை செய்யப்படவில்லை. ஒரு ஐ பி எஸ் அதிகாரி உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . எனவே இந்த வழக்கில் மன்னிப்பு வழங்க ராஜீவ் குடும்பத்தினருக்கு எவ்வித தகுதியும் இல்லை . சட்டத்தை திருத்தி மீண்டும் தூக்கிலிடமுடியுமா என பார்க்க வேண்டும்.
இந்த 7 பேருக்கு விடுதலை கேட்பதை விட தேச துரோக செயல் ஏதுமில்லை.. இன்று பேரறிவாளன் உட்பட 7 பேர்.. நாளை அல்உம்மா பாஷா வகையறா.. இதுதான் இவர்கள் திட்டம்.. பயங்கரவாதிகள் விடுதலைக்கு எதிராக குரல்கொடுப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...