Saturday, May 1, 2021

நெற்றியில் திலகமிடுவது எதற்காக தெரியுமா?


🌹
👉 பெண்கள் என்றால் நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியிலும், திருமணம் ஆன பெண்கள் நெற்றி மற்றும் நெற்றியின் வகிடிலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். ஏன் அவ்வாறு திலகமிடுவது அவசியம் என்று கூறுகிறார்கள் தெரியுமா? அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
👉 இந்து மத ஆசாரப்படி ஒரு பெண் இரண்டு புருவத்திற்கும் மத்தியில் குங்குமத்தை வட்டமாக வைத்து கொள்ள வேண்டும்.
👉 முந்தைய காலத்தில் பெண்களைச் சிலர் தன் வசியப்படுத்தி அழைத்துச் சென்றுவிடுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்தால் அந்த பெண்ணை யாராலும் தன் வசப்படுத்த முடியாது. அந்த அளவிற்கு சக்தி மஞ்சள், குங்குமம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக நம்பப்படுகிறது.
👉 நெற்றியின் மையத்தில் குங்குமம் வைப்பதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களில் அடங்கி உள்ள மருத்துவ சக்திகளை எடுத்து நம் மூளைக்குள் செலுத்திவிடுகிறது. இதனால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தைச் சீராக இயக்கி, உடல் உபாதைகளிலிருந்து காக்கிறது. முக்கியமாக கண்களை பாதுகாக்கிறது.
👉 நாம் சந்தனத்தை பிரம்ம முகூர்த்தத்திலும், சூரியன் உதித்த பிறகு குங்குமத்தையும், மாலைப் பொழுதினில் திருநீரையும் அணிந்து வந்தால் நரம்பு மண்டலம் உறுதிப்பட்டு நோய் வராமல் தடுக்கப்படும்.
🙏
May be an image of one or more people and text that says 'பொட்டு வைப்பது என்? புருவ மத்தியில், மூளையின் முன்புறம் பைனீயல் கிளாண்ட் என்னும் சுரப்பி உள்ளது. யோக சாஸ்திரத்தில் இதனை ஆக்ஞா சக்கரம் என்பர். இதனைக் குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். நெற்றியில் இடும் பொட்டை நெற்றித்திலகம் என்பர். திலம் என்றால் எள். அளவில் சிறிதாக எள்ளைப் போல இடுவதால் திலகம் என பெயர் வந்தது. அக்காலத்தில், அரசர்கள் சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். இதற்கு திலக தாரணம் என்று பெயர். பூக்கள், பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் இதில் இடம்பெறும். தாமரைமலர் வம் இதில் சிறப்பானது.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...