சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.
மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.
அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.
இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.
இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment