நவகிரகத் தலங்களில் புதனுக்கு உரிய தலமாக விளங்க கூடியது.
இங்கு மூலவராக வீற்றிருக்கும் இறைவன் பெயர்சுவேதாரண்யேஸ்வரர் ஆவார்.
நால்வர் பாடல் பெற்ற தலமாகும்.
காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய ருத்ர பாதம் இங்கு இருக்கிறது இதை முறையாக வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என இந்தக் கோயில் இருக்கும் ஐதிகமாகும் .
புதனால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கு இக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
இக்கோயிலுக்குச் சென்றால் உடனே புதன் பகவானை தரிசிக்க கூடாது.. முதலில் சிவபெருமானையும் அடுத்து உமாதேவியும் தரிசித்த பிறகே கடைசியில் புதனை தரிசித்து பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டும்.
அங்கே தனியாக விட்டிருக்கும் புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி மற்றும் அந்த கோயிலை 18 முறை சுற்றி வந்து வழிபட்டால் நம் வாழ்வில் வரும் துன்பங்களை வராமல் தடுக்கலாம்.
மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
இனிய நல்வாழ்த்துக்களுடன்....
No comments:
Post a Comment