துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் மோசடி நடந்துள்ளதாம். அதாவது, நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., அரசின் அறிவிப்பை, அந்த வங்கி நிர்வாகத்தினர் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே பெற்றிருந்த ஆவணங்களின்படி, பல நபர்களுக்கு நகைக் கடன் கொடுத்ததாக போலி ஆவணங்களை தயார் செய்து, பணத்தை கையாடல் செய்துள்ளனர்.
தி.மு.க., அரசியல் கட்சியாக இருந்தவரை வெறும் பொதுக் கூட்டம், நாடகம், மாநாடு, ஊர்வலம் என்ற அளவிலேயே இயங்கியது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என கொள்கை வகுக்கப்பட்டதும், பணம் எப்படி குவிக்கலாம் என, அக்கட்சி சிந்திக்க துவங்கியது.அதில் ஒன்று தான், கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்து, 'ஆட்டையை' போடுவது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடன், ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் தி.மு.க.,வினர் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர். கூட்டுறவு சங்கங்கள், ஒட்டகம் தலையை நுழைத்த கூடாரம் மாதிரி ஆனது.
அதுவரையில் அந்த சங்கத்தை முறையாக நிர்வகித்து வந்த இயக்குனர்களை, சாம, தான, பேத, தண்ட முறைகளை உபயோகித்து விரட்டியடித்தது.அதாவது, 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற கொள்கையோடு இயங்கி கொண்டிருந்த கூட்டுறவு சங்கங்களை, 'கூட்டுறவே வீட்டுயர்வு' என கொள்ளையடிக்க துவங்கியது.அதுவரையில் லாபத்தில் இயங்கிய கூட்டுறவு சங்கங்கள், தி.மு.க., நுழைந்த பின் நஷ்டத்தில் தள்ளாட துவங்கின.அப்படி நஷ்டத்தில் சங்கத்தை இழுத்து மூடும் நிலை வரும் போது, அரசு நிதியுதவி செய்வது வாடிக்கையாக இருந்தது.சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும். கூட்டுறவு சங்கம் இயங்கினால் தானே, இயக்குனர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை வசதியையும் பெருக்கி கொள்ள முடியும்.
தி.மு.க., ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை, எந்த கூட்டுறவு சங்கத்திற்காவது அரசு நிதியுதவி செய்திருக்கிறதா? சங்க உறுப்பினர்கள் வாங்கியிருந்த கடன்களை ரத்து செய்திருக்கிறதா?அத்தனையும், தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் தான் நடைபெற ஆரம்பித்தன.குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடுகள் நிச்சயம் நடந்திருக்கும். அந்த மோசடி 200 கோடி ரூபாய்களையும் தாண்டி மிரள வைக்கும்.கிடங்கில் இருப்பு வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை, எறும்பு தின்று தீர்த்ததாகவும்; அந்த சாக்குப்பைகளை கரையான் அரித்து கபளீகரம் செய்து விட்டதாகவும் கதையளந்த கட்சியான தி.மு.க.,விற்கு மோசடி செய்வது குறித்து சொல்லியா தர வேண்டும்!
No comments:
Post a Comment