பணம் தேவைக்கும் மேலே போக, போக நாம் பணிவோடு வாழப்பழகனும்.பணிவு இல்லாமல் போனால், வந்த பணம் போன வழி தெரியாமல் போகும் என்பதும் சத்தியமே
நல்லா, கவனிங்க, உறவுகளே, பணம் என்பது நம் தேவைக்கு பயன்பட வேண்டிய ஒன்று தான்.அதைச் சேர்த்தே ஆகனும்ன்னு சாப்பிடாமல் இருந்து எல்லாம் சேமிக்க கூடாது.
புரிந்து கொள்ளுங்கள் உணவு, உடை, உறைவிடம் எனும் இருப்பிடம் இந்த அத்தாயவசியத் தேவையை முதலில் சீராக கொண்டு வாருங்கள். இது மூன்றும் அடிப்படைத்தேவை.
அடிப்படைத் தேவை முடிந்ததும், குழந்தைகள் கல்வி, சீர், சீராட்டு என கவனமாக கையாளுங்கள்.
எல்லாவற்றிற்கும் திட்டத்தை இப்போதே தயாரித்து விடுங்கள்.
அப்படியே, இறைவனிடம், பிரபஞ்சத்திடம் கொடுத்து விட்டு, நீங்கள் உங்கள் திட்டங்களை, கனவு கண்டே வாருங்கள்.
அதே சமயம் அதற்கான எல்லா முயற்சியும் செய்யுங்கள்.கனவு ஒருநாள் நினைவாக மலரும்.
நமக்கு என்ன வேணும்ன்னு முதலில் ஒரு விஷன்சார்ட் தாயாரியுங்கள்.
என்னவெல்லாம் வேண்டும், தேவைகள் என்ன, எப்படி வாழ வேண்டும்,
என்ற உங்கள் எண்ணங்களை வண்ணமாக்கி எழுதுங்கள்.
அந்த உங்கள் கனவை எப்போது நினைவாக வேண்டும் என்ற நாள் அதாவது 2021 ஜனவரியில் புதுவீட்டில் குடியேற வேண்டும் ஆனந்தமாக என குறித்துக் கொள்ளுங்கள்.
இதுபோல, உங்களுக்கு, என்ன, என்ன தேவைகள், எவ்வளவு பணம் தேவைப்படும் எப்போது அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு எழுதுங்கள்.
நிச்சயமாக அதற்குரிய
அனைத்தும் நடந்தே ஆகும்.
நமக்கு என்ன வேண்டும் எனத் தெரியாமலேயே இங்கு
பாதிப்பேருக்கு, பாதி வாழ்க்கை
முடிந்து போகிறது.
அதிலும், பாதிப்பேருக்கு, மற்றவர்கள் மேலேயே கவனம்.பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன், சொந்தபந்தக்காரன் என அவர்களைப் பார்த்து நாமும் அது போல வாழ நினைக்கின்றோம்.
மிகப்பெரிய தவறு. வெளியில் தெரியும் வாழ்க்கை வேறு.உள்ளே இருக்கும்
வாழ்க்கை வேறு என கவனமாக உணருங்கள்
மற்றவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
அதுவும் நல்லவையாக இருந்தால்மட்டுமேநமக்கு.
நம்ம வாழ்க்கைக்கு என்ன வேண்டும் என்பதை நம்மனமே நமக்கு
வழிகாட்டியாய் வழிகாட்டும்.
மனதின் வழிகாட்டுதலில்
ஒரு Vision Chart இன்றே தாயாரியுங்கள்.
மனதை கவர்ந்தது.
No comments:
Post a Comment