*இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் நேரடி விமானம் என்றால் 16 மணி நேரம் ஆகும்*_.
_பணத்தை மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று 2-3 விமானங்களை பிடித்து போனால் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஆகும்._
_அதுவும் எகானமி கிளாஸ் பயணம் என்றால் கிட்டத்தட்ட தீபாவளி சமயத்தில் நம் ஊரு திருவள்ளுவர் பேருந்தில் பயணிப்பது எப்படி இருக்குமோ அது போல் தான் இருக்கும்_
_நல்ல வேலையாக யாரும் நின்று கொண்டு வர மாட்டார்கள்_.
_அதுவே 90 ஆயிரத்தில் இருந்து 1.25 லட்சம் வரை செலவு பிடிக்கும் (2 வழி டிக்கெட்)_.
_*இது போன்ற சிரமங்கள் எதுவும் மோடிக்கு கிடையாது, உண்மை தான்.*_
_சொகுசான விமான பயணமாக தான் அமைந்திருக்கும். இருந்தாலும் 16 மணி நேர பயணம் என்பது உண்மையில் அனைவருக்குமே சிறிது அயர்வை கொடுக்கும்._
_உண்மையான சிரமம் என்பது அமெரிக்காவில் பகல் நேரம் என்பது நமது இரவு நேரம்_.
_குறைந்தது 4 மணி நேரமும் அதிக பட்சமாக 10.30-12.30 மணி நேரமும் வித்தியாசம் வரும். போகும் மாகாணங்களை பொறுத்து இது மாறுபடும்_.
_அந்த கால சூழலுக்கு ஏற்ப நம் உடம்பு தயார் செய்து கொள்ளவே குறைந்த பட்சமாக 72 மணி நேரமும் அதிக பட்சமாக 1 வாரமும் தேவை படலாம்_.
_அதுவும் முதல் ரெண்டு நாட்கள் மிகவும் கொடுமையாக இருக்கும்._
_இரவில் தூக்கமே வராது பகலில் தூங்கி வழிவோம். இது இயற்கை சாதாரண மனிதனோ, மோடியோ அனைவர்க்கும் இது பொருந்தி வரும்._
_மோடி இந்தியாவில் விமானம் ஏறும் வரை பல மீட்டிங்களில் கலந்து கொண்டு விட்டு விமானம் ஏறுகிறார் விமானதில் ஓய்வு எடுப்பார் என்று பார்த்தால்_
_நீண்ட விமான பயணம் என்றால் பைல் பார்க்க எதுவாக இருக்கும் என்று ட்வீட் செய்கிறார்._
_அமெரிக்காவில் சந்திக்க போகும் மனிதர்கள் அவர்களிடம் பேச வேண்டியவை என்பதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறார்._
_*அமெரிக்காவில் இறங்கி அவர் இருந்த 64 மணி நேரங்களில் 25 சந்திப்புகள்*_.
_அது அத்தனையும் வெற்றிகரமாக கையாள வேண்டும் என்றால் எத்தனை உழைப்பு இந்த மனிதருக்கு தேவை பட்டிருக்கும்_.
_*இதில் QUAD தேச தலைவர்களுடன் சந்திப்பு, ஐ நா சபை மாநாட்டில் சிறப்புரை என்பது எல்லாம் உலகமே உற்று பார்க்க கூடியது*_
_அத்தனையும் வெற்றி கரமாக முடித்து நாடு திரும்பியவர்_,
_இன்று வந்தவுடன் பிஜேபி கட்சி ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார்_,
_அதற்கு பின் நேராக மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களோடு பேசுகிறார்._
_அதற்கு பின் வழக்கமான பணிகள். இரவு 7 மணிக்கு தீடிர் என்று கிளம்பி போய் புதிதாக கட்டி வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வை இடுகிறார்_.
_*நாடி, நரம்பு என்று உடல் முழுவதும் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஒருவரால் தான் இப்படி கருமமே கண்ணாக வேலை பார்க்க முடியும்.*_
_அதனால் தான் சொல்கிறேன்_
_*என் பிரதமர் எனது பெருமை என்று*_
_( *MY PM MY PRIDE* )._
_இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்._
_*ஜெய் ஹிந்த்*_
No comments:
Post a Comment