அதிகாலையில் எழுவது
மிகவும் சிறப்பான செயல்.
அதிகாலையில் உடலும்,
சிந்தனைகளும் உற்சாகமாக இருக்கும்.
Five 0 CLock Club என்று ஒன்று உண்டு.
அதில் இணைந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீங்களே
மனதளவில் ஒரு instruction.
நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பேன் என்று நமக்குள்ளேயே
ஒரு சங்கற்பம்.
அதிகாலையில் சுமார்
ஒரு மணி நேரம் உங்கள் நேரம்.
யாரும் குறுக்கிட மாட்டார்கள்.
உடற்பயிற்சி ,தியானம், நற்சிந்தனைகள் என்று வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
ஒரு மாதம் கழித்து பார்த்தால் உங்கள் வாழ்வியல் முன்னேற்றத்தை பார்த்து
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த 5 மணி Clubல் இணைய முதல் நாள் இரவே நம்மை தயார் செய்து கொள்ளுங்கள்.
இரவு உணவு உண்டவுடன் சிறு குறு நடை
தூங்கப் போவதற்கு முன் Relaxஆக ஒரு சாய்வு நாற்காலியில் பத்து நிமிடம் உட்காருங்கள்.
கண்களை மென்மையாக மூடி உடலை தளர்த்தி கொள்ளுங்கள்.
சில நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசியுங்கள். பிரபஞ்ச சக்தி சுவாசத்தின் வழியே உங்கள் உடல் முழுவதும் பரவி உங்களை உடல் நலத்தில், சிந்தனையில் மேன்மையுற செய்கிறது என்று உறுதியாக நம்புங்கள்.
நான் புத்துணர்ச்சியோடும், விழிப்போடும், ஆர்வத்தோடும் காலையில் விரும்பிய நேரத்தில் ( 5 மணிக்கு) எழுவேன் என்று உங்களுக்குள் குறைந்தது 20 முறையாவது சொல்லி கொள்ளுங்கள்.
அதிகாலையில் எழுவதால் நம் வாழ்வு எப்படி எல்லாம் சிறக்கும், அன்றைய நாளை அழகாக திட்டமிடலாம், செய்யும் செயல்களை நாள் முழுவதும் சிறப்பாக செய்யலாம் என்பது போல positive thoughts நேர்மறை எண்ணங்களை பரவ விடுங்கள்.
இது ஒரு நல்ல Auto suggestion.
ஆழ் மனதில் Sub conscious Mindல்
நன்றாக பதிந்து விடும்.
உங்களை சிறப்பாக வழிநடத்தும்.
நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு
நம் நாளை தொடங்குவோம்.
அதிகாலை 5 மணிக்கு எழுந்தவுடன் நினைத்து கொள்ளுங்கள் :
மனோகர் உங்களுடன் காற்றின் வழியே கை குலுக்கி உங்களை 5 O' Clock Clubக்கு உங்களை வரவேற்கிறார் என்று.
முயற்சித்து பார்க்கலாம்
பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
வாழ்வை
இனிமையாக
்கி கொள்ளலாம்.நல்ல மாற்றங்களை வாழ்வில்
வசப்படுத்தி கொள்ளலாம்.
அதிகாலை நேர இயற்கையின்
மாற்றங்களை ரசிக்கலாம்.
சூரிய உதயம், வான மகளின் சதிராட்டங்கள், பறவைகளின் இனிய உற்சாக குரல்கள்.
நல்ல Ozone காற்று. நம்முள் மூழ்கி முத்தெடுக்க
அருமையான
தருணம்.
No comments:
Post a Comment