சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம்; அது போலத்தான் டிரிங்கஸ் சாப்பிடுவதோ, அது போன்ற மற்ற விஷயங்களோ..
ஒருவரின் 'கெட்ட பழக்கம்' எந்த வகையிலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் பார்த்துக் கொள்வது அவரது கடமை..! அதில் கவனம் இருக்கும் பட்சத்தில், கெட்ட பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமே..!
ஆனால், கெட்ட குணம் அப்படி அல்ல - அது அடுத்தவருக்கு தீங்கிழைக்கவே உருவாவது..
அதீத பொறாமைப்படுவது; தன் தேவைக்காக அடுத்தவர்களை வஞ்சிப்பது; அதீத சுயநலம், புறம் பேசுதல், நம்பியவரை ஏமாற்றுவது.... இது போன்றவை கெட்ட குணங்கள்..!
'கெட்ட பழக்கம்' உள்ளவர்கள் எல்லாம் 'கெட்ட குணம்' கொண்டவர்கள் அல்ல..! அது போல, கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று அர்த்தமல்ல..! பாரதியாருக்கு கஞ்சா பழக்கம் இருந்தது என்று சொல்வார்கள்; அதனால் அவர் மேன்மையற்றவராகி விட்டாரா என்ன..?
கெட்ட பழக்கங்கள் எதுவுமே இல்லாத பலர், தம் கெட்ட குணங்கள் கொண்டு, தம் குடும்பத்தை, சமுதாயத்தை, நாட்டை சீரழிப்பதை நாம் பார்க்கிறோமே..?
ஒரு irony என்னவென்றால் -
"அவனிடம், பொய், பொறாமை, சுயநலம் போன்ற கெட்ட குணங்கள் இருக்கு.. நீ அவன் கூட சேராதே..!" என்று யாரைக் காட்டியாவது நாம் நம் குழந்தைகளை தடுக்கிறோமா..?
இல்லை..!
சொல்லப்போனால், அது போன்ற குணங்கள் கொண்டவர்களைத்தான் காட்டி, "பாத்தியா.. அவன் எவ்ளோ சாமர்த்தியமா இருக்கான்.? நீ அவன்கூட ஃப்ரெண்டாயி அந்த சாமர்த்தியம் எல்லாம் கத்துக்கணூம்..!" என்று சொல்கிறோம்..!
ஆனால், பிறர்க்கு உதவும் குணம், இனிய பேச்சு, கள்ளமில்லா நடத்தை போன்ற 'நல்ல குணங்கள்' கொண்டிருக்கும் ஒருவனை, 'அவன் சிகரெட் புடிக்கிறான்..' என்ற காரணத்தால் "அவனிடம் சேராதே.." என்று நம் பிள்ளைகளைத் தடுக்கிறோம்..!
இந்த fine differenceஸை புரிந்து நட்பு பேணுவதில், பெரும்பாலான இன்றைய தலைமுறை இளைஞர்கள், போன தலைமுறையைச் சேர்ந்த நம்மை விட பெட்டராக இருக்கிறார்கள் என்பது உண்மை..! நாம் அதைப் பாராட்டுவோம்; அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வோம்..!
நம் டீனேஜ் பிள்ளைகளிடம் அறிவுரை சொல்ல நினைத்தால், நாம் சொல்ல வேண்டியது :
'கெட்ட குணங்கள்' இல்லாமல் இருப்பது, நம் நல்வாழ்க்கைக்கு, மனநிம்மதிக்கு, நிஜமான சந்தோஷத்திற்கு இன்றியமையாதது..!
'கெட்ட பழக்கங்கள்' இல்லாமல் இருப்பது, நம் உடலுக்கும், நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழவும் தேவையானது..!
கெட்ட குணங்கள், கெட்ட பழக்கங்கள் இரண்டுமே இல்லாமல் இருப்பது, வாழ்க்கையில் உன்னதமானது..!
No comments:
Post a Comment