விருத்தாச்சலம் கண்ணகி – முருகேசன் கொலை வழக்கு பற்றியும் அதன் மூலம் அம்பலத்திற்கு வந்தவர்கள் பற்றியும்…?
கண்ணகி வன்னியர் பொண்ணு. துடுக்கான பொண்ணு. முருகேசன் தலித். பொறியியல் பட்டதாரி. இரண்டு பேரும் லவ் பண்ணி திருமணம் பதிவு பண்றாங்க.
பொண்ணு வீட்ல தேடறாங்க. முருகேசன் ஊருக்கு வர்றார். அவரைக் கூப்பிட்டு கண்ணகி எங்கே என்று கேட்க, மறுக்கவும், NLC போட்ட 300 அடி போரில் தலைகீழாக கட்டிவைத்து சேந்துகிறார்கள். அப்போது முருகேசன் உண்மையைச் சொல்லிவிடுகிறார்.
12 பேர் திரண்டு இருவரையும் அழைத்து வந்து மரத்தில் கட்டி வாயை இறுகக்கட்டிக் கொண்டதால், மூக்கு மற்றும் காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்கிறார்கள்.
அப்போது முருகேசனின் சித்தப்பாவை மற்றொரு மரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர் கண் முன்னாடிதான் இவ்வளவும் நிகழ்கிறது. இருவரது பிணத்தையும் தனித்தனியே எரிக்கிறார்கள்.
ஊரே பயந்து போய் கிடக்கு. முருகேசன் அப்பா மற்றும் உறவினர்களை 4, 5 நாட்கள் கழித்து அங்கிருக்கிற தலித் இளைஞர்கள் சென்னை கூட்டி வந்து பத்திரிக்கையாளர் கூட்டம் வைத்தனர்.
Local பத்திரிக்கைகள் மற்றும் நக்கீரன்ல படம் போட்டு செய்தி வந்தது. அப்ப நான் திருச்சியில தங்கியிருந்தேன். நக்கீரனைப் பாத்துட்டு எல்லாருக்கும் போன் பண்ணி நெய்வேலி துரைக்கண்ணுவுடன் காரில் முருகேசன் வீட்டுக்குப் போறோம்.
வழக்கு CBI விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை தலித்துகள் 4 பேரை கொலைக்கேஸில் போட்டிருந்தனர். ஆனால் தற்போது சி.பி.அய். முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை 4வது நபராக குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அய்யாசாமி கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியன் டம்ளரில் ஊற்றிக்கொடுத்த பூச்சிக் கொல்லி மருந்தை முருகேசனின் மூக்கு, வாய், காதில் ஊற்றி சாவுக்குக் காரணமாக இருந்தார் என CBI அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். கொலை வழக்கு என்பதால் இருதரப்பும் சமரசம் ஆகிவிடும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
சொந்தக்கார பையன் சண்முகம் மூலமாக திருமாவளவனுக்கு போன் போட்டு முருகேசன் அப்பாக்கிட்ட பேச கொடுத்திருக்காங்க. அவர் நலம் விசாரிட்டு, “எதுக்கு வீண் பகை. செத்தவன் திரும்பியா வரப் போறான். பெரிய தொகை தர்றதா சொல்றாங்க. வாங்கிக்கிட்டு வழக்கை நிறுத்தி விடுங்கள்.” என்று சொல்லியிருக்கார்.
அவர்கள் மறுத்தவுடன் “ஒரு வேளை நீங்க தண்டனை வாங்கிக் கொடுத்திட்டீங்க என்றால் வன்னிய மக்கள் கொதிச்சுருவாங்க. உங்களுக்கு பாதுகாப்பு இல்லை”, என்று சொல்லியிருக்கார். “பையனே செத்துட்டான். நாங்க இருந்து என்ன பண்ணப்போறோம்” என்று முருகேசனின் அப்பாவும் அதற்கடுத்து சித்தப்பாவும் மறுக்க, மேலும் சிந்தனைச் செல்வனுக்கும் போன் போட்டுக்கொடுக்க அவரும் அதே கருத்தைச் சொல்லியிருக்கார்.
முருகேசனின் சித்தப்பா எனக்கு போன் பண்ணி, “எங்களை திருமாவளவன் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வரச் சொன்னான்னு சொல்லி ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான். விரட்டிகிட்டு இருக்கிறோம்” என்று சொன்னார். அவனை விரட்டுங்கள் எங்கேயும் போக வேண்டாம்” என்று சொன்னேன்.
வி.சி. விவசாய அணியைச் சேர்ந்த கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி என்னிடம் போனில் “வழக்கு சம்மந்தமாக அய்யா சாமியிடம் பேச, ஆள் அனுப்பி அழைத்து வர அனுப்பினேன். அவர்கள் வர மறுக்கிறார்கள். நீங்கள் சொன்னால் வருவார்கள்” என்றார்.
நான் “அவர்ளுக்கு வழக்கு சம்மந்தமாக எதுவும்தெரியாது. என்னோட செல்போன் எப்போதும் ஆனில் இருக்கும். மனசாட்சி உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் வழக்கு பற்றி பேசலாம்” என்றேன்.
----------------------------------------------
பதிவை எழுதியவர்:
- பொ.இரத்தினம் (கண்ணகி முருகேசன் சாதிவெறி கொலைக்கு எதிராக சமரசமின்றி போராடி தீர்ப்பு வாங்கி தந்த வழக்கறிஞர்.
==================================
No comments:
Post a Comment