காமராசர் முதல் மந்திரி. பெரியார் வெளிநாட்டு பயணத்தை தொடங்க தயாராகிறார். 2 நாள் தான் உள்ளது ஆனால் விசா கிடைக்க வில்லை. வேப்பேரி தலைகள் திருமலை பிள்ளை தெரு வந்து முதல்வர் காமராஜரிடம் சொல்கிறார்கள். அவர் உத்தரவிட்டார் ஏற்பாடுகள் நடந்து விசா வருகிறது. ஆனால் மதியம் ஒரு மணி கப்பலில் செல்லவேண்டும் தூதரக அதிகாரிகள் மாலை 5 மணிக்கு தான் விசா கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். கப்பல் கிளம்பி விடும் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். காமராஜர் கவனத்திற்கு இந்த தகவல் தெரிய வந்தது. கப்பல் அதிபர் பாய்க்கு போன் போடுங்க என்கிறார். பாய் உங்கள் கப்பல்ல பெரியார் போக இருக்கிறார். ஒரு அவசரம் கப்பல் ஒரு மணி க்கு பதிலாக மாலை ஆறு மணிக்கு கிளம்பட்டும் என்கிறார் அதன் படி விசா வந்த பிறகு ஆறு மணிக்கு பெரியாருடன் கப்பல் புறப்பட்டு சென்றது. இதுதான் அரசியல் அதிகாரம். இது தமிழர் கையில் இருந்தால் தான் தமிழனுக்கு நன்மை.

No comments:
Post a Comment