அம்மா...எனக்கு ஒரு சந்தேகம்....
படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான்...
என்னப்பா....என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
அம்மா...நான் தினமும் காலையில் பிக்ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து...அதையும் தானம் பண்ணி...மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம்...
அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா...எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய் என்றான்...
அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள்.
குழந்தாய்....நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது...
நீயே உணரும் நாள் வரும்...இப்போது தூங்கு...என்றவாறே பாயில் படுத்து..அசதியில் உறங்கிப்போனாள்.
சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை...
அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்...இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் ...கிளம்பி விட்டான்....ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...
சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான்.....இரவு நேரமாகி விட்டது...வந்து சேர்ந்த இடமோ...அடர்ந்த வனம்...
காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம்...மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது....குழந்தை தானே....?????
நாராயணா....எனக்கு பயமாக இருக்கிறதே...பசி வேறு.....சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான்...
சிறுவன் மரத்த்டியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான்.
தம்பி...நீ யார்....? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம்....இங்கெல்லாம் இருக்கக் கூடாது...நீ உன் வீட்டிற்கு போய் விடு என்றான்...
பின்....வேண்டாம். ..வேண்டாம்....இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.....நாளை விடிந்தபின் போகலாம் என்றவாறு ....மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான்.
மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
வேடனின் துணவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை ...
என்ன செய்வது....வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான்....அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை...இருவர் மட்டுமே பட்த்துக்கொள்ள முடியும்...
சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான்....குழந்தை அசதியில் உறங்கி விட்டான்....காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான்.....
இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்...
சிறுவன்....மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான்...நாட்கள் உருண்டோடுகின்றன...அவன் கேள்விக்கு.....அதாவது....தானம் செய்தால் கிடைக்கும் பலன்..என்ன....அவன் பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது...
ஒரு நாள்....முனிவர் ஒருவரை சந்திக்கிறான்...தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான்...தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான்....வேடன் கதை உட்பட....
முனிவர் சிறிது யோசித்து...பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, நீ அங்கு போ.....உனக்கு விடை கிடைக்கும் என்றார்....
சிறுவன் அங்கு செல்கிறான்....நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது....அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்....தற்போது கர்ப்பமாக இருக்கிறார்...குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது....
இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது......தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரன்மனை செல்கிறான்...
ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.
சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ....??????
அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
சிறுவன்....மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான்....
அரசே.....ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது
அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்.....
அரசனுக்கு ஆச்சரியம்....ஒரு பாலகன்.....தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே...என்னதான் நடக்கிறது பார்க்கலாம்....
அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார்...
சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து....
அரசே.....சாதாரணக் குழந்தையைப்போல்....இந்தக்குழந்தை அழவில்லை....ஆனால் ....ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது என்று சற்று கவலையுடன் கூறினாள்.
அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார்....அரசனுக்கும் ....ஆர்வம்
சிறுவன் குழந்தை அருகில் வருகிறான்....
என் சந்தேகத்தை ...... தீர்த்து வை....தானத்தின் பலன் ..... என்ன....?
என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க.....என்ன .....ஆச்சரியம்.....
குழந்தையிடமிருந்து பதில்....
"அத்தினைக்கு.....இத்தனையானால்
அத்தனைக்கு.....எத்தனை.... வேண்டும்....."
என்று கூறி...சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது ....அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி....
சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான்.
அவனுக்கு புரிந்து விட்டது...
அன்று இரவு....ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன்....அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்...தன் தாய் ...இருக்கோ ... இல்லையோ....தினம் ....தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு .....உணவளிக்கிறாள்...... ஆகா.... இதுதானா.... தானத்தின் மகிமை..!
No comments:
Post a Comment