Saturday, November 6, 2021

அம்மாவின் புகழை கெடுக்க நினைக்கும் அவர்கள் மீது புகார் கொடுத்து சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பெண் எப்போதும் இந்த நாட்டில் ஒரு கேலி பொருள் தான், அது அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி .மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வாழ்வு, அவர்கள் வெளியில் கூறாத வரை அது தனிப்பட்ட வாழ்வு, ஒரு பெண் இறந்த பிறகு எத்தனை முறைதான் அவளின் கற்பையும் மானத்தையும் இந்த ஊடகம் ஏலம் போடும்? மிகவும் வேதனைக்குரிய ஒன்று, இறந்த ஒருவர் தெய்வத்திற்கு சமம், அது யாராக இருந்தாலும் தனிப்பட்ட அவரின் வாழ்வை பற்றி அவர்கள் வெளியே கூறாத ஒன்றை பற்றி நாம் விமர்சனம் செய்வது, முழுமையாக ஒரு விஷயத்தை ஆதாரபூர்வமாக தெரியாதபோது கேள்வி எழுப்புவது உலகிலேயே கீழ்த்தரமான ஒரு செயல், என்று திருந்தும் இதுபோன்ற ஊடகங்கள்?

"அம்மா அம்மா" இன்று ஓராயிரம் முறை அழைத்தவர்கள், தன் அம்மாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போதெல்லாம் அவரின் மானத்தை ஏலம் போடும் போதெல்லாம் அமைதி காப்பது வெட்கக்கேடு . நீங்கள் அம்மா என்று கூப்பிட்டது அனைத்தும் தங்களின் சுயநலத்திற்காகவும் தேவைக்காவும் மட்டும்தானே? உண்மையான தாயின் மானத்தை காப்பவனே மகன், அப்படி இங்கு யாரும் அவரின் உண்மையான பிள்ளையாக இல்லை , அம்மா என்று வெறும் வாய் வார்த்தையில் கூப்பிட்டு இருக்கின்றார்கள் என்று தெளிவாக தெரிகிறது, உடன் இருந்தவர்கள் கூட மவுனம் காப்பது வேதனைக்குரிய ஒன்று . அவரவர் வாழ்க்கையை அவரவர் இடத்தில் இருந்து வாழ்ந்தால் மட்டுமே அதனுடைய வலி தெரியும் ,வாழும்போது தான் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அத்தனை தாக்குதல்கள் ,எல்லா வழியிலும், இறந்த பிறகும் கூடவா இப்படி ?, இப்படியும் சில மானங்கெட்ட மனிதர்கள். உண்மையான அஇஅதிமுக தொண்டர்களாகிய நாம் இதுபோன்ற போலிகளை உடனடியாக பதிலடி கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும், அம்மாவின் குடும்பம் என்றால் அது அவரின் சகோதரரின் குடும்பம் மட்டும் தான், பிள்ளைக்கள் என்றால் அது அஇஅதிமுக தொண்டர்கள் தான், மக்களுக்காக அர்பணிக்க பட்ட தூய தவ வாழ்த்த தலைவியின் தியாகத்தை கொச்சை படுத்த அனுமதிக்க கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...