கரூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க நடந்த மதிப்பீடு முகாமிற்கு காங்., - எம்.பி., ஜோதிமணி வந்தபோது, அவரை புறக்கணித்து கலெக்டர் புறப்பட்டு சென்றார்.
மத்திய அரசின் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அனுமதி மறுப்பதாக கூறி, கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் எம்.பி., ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நேற்று மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் வாயிலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க மதிப்பீடு செய்யும் முகாம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
காலை 10:30 மணிக்கு எம்.பி., ஜோதிமணி கார், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நுழைந்தது. உடனே, கலெக்டர் பிரபுசங்கர் முகாமை விட்டு வெளியேறி தன் காரில் ஏறிச் சென்றார். அவரது காருக்கு முன்னால் எம்.பி., ஜோதிமணியின் கார் வந்து நின்றது. அவரை கண்டுகொள்ளாமல் கலெக்டர் சென்று விட்டார்.
No comments:
Post a Comment