*நேர்மையான நீதியரசர்களுக்கு அரசியல் சாயம் பூசி களங்கப்படுத்தலாமா ?*
ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் மாரிதாஸ் மீது தமிழக காவல்துறை போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது
இதனை பொறுத்து கொள்ள இயலாத திமுக கம்யூனிச ஆதரவாளர்கள் சிலர் தீர்ப்பு வழங்கிய *நீதியரசர் திரு G.R.சுவாமிநாதன்* அவர்கள் முன்காலத்தில் RSS பிரச்சாரக் என சவுக்குசங்கர் போன்றவர்களை ஏவி விட்டு பதிவிடுகிறார்கள். திமுக வினர் பலரும் நீதியரசர் திரு G.R.சுவாமிநாதன் அவர்கள் தீர்ப்பை களங்கப்படுத்தி உள்நோக்கம் கற்பித்து சமூக வளைதளங்களில் விமர்சிக்கிறார்கள் இது கண்டனத்திற்குரியது ஆகும்.
இதே நீதியரசர் திரு G.R.சுவாமிநாதன் அவர்கள் கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்பாளர்கள் மீது போடப்பட்ட தேசதுரோக குற்றசாட்டு வழக்குகளையும் கூட சட்டப்படி முழுமையாக தள்ளுபடி செய்தார் அப்போது அவர் RSS காரர் என இவர்களுக்கு தெரியவில்லையோ ?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டகாரர்கள் மீதான வழக்குகளையும் நீதிப்படி தள்ளுபடி செய்தார் அப்போது அவர் சங்கி என தெரியவில்லையோ ?
சட்டப்படி, தர்மப்படி, மனசாட்சிப்படி, ஆவணங்களின் படி அரசியல் சித்தாந்த விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு நீதிமானாக செயல்பட ஒரு RSS காரனால் மட்டுமே முடியும் என்பதற்கு உதாரணம் நீதியரசர் திரு G.R.சுவாமிநாதன் அவர்கள்
சரி அவர் முன்னாள் RSS ஊழியர் அது ஊரறிந்தது அதை ஏன் மாரிதாஸ் வழக்கோடு முடிச்சு போடுகிறார்கள்.
நீதிபதிகளாக வருவதற்கு முன்பு வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் காலத்தில் 90% வழக்கறிஞர்கள் ஏதாவது ஒரு அரசியல் சித்தாந்த ரீதியான இயக்கங்களில் ஈடுபாடு கொள்வது இயல்பு
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் திமுக ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னாளில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியானார் . அதன் பின் அவர் மகனும் உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
அவர்களது தீர்ப்புகளை எந்த சங்கியும் அரசியல்ரீதியாக கொச்சைபடுத்தவில்லையே. காரணம் நீதிபதியான பின்பு அவர்களை நீதிமானாக தான் பார்த்தோமே தவிர கட்சிக்காரராக பார்க்கவில்லை அது தான் RSS பண்பாடு
திமுக வில் வழக்கறிஞர் அணி இளைஞரணி அந்த அணி இந்த அணி என பொறுப்பிலிருந்த எத்தனையோ பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள் அவர்களை நாங்கள் பட்டியலிடவா ?
நீதிபதி சந்துரு கம்யூனிசவாதி. அவரது தீர்ப்பை படமாக்கி பாராட்டி கொண்டாடும் கம்யூனிசவாதிகள் அவரது பல்வேறு தீர்ப்புகளுக்கு இது போல அரசியல் உள்நோக்கம் கற்பித்தால் ஏற்பார்களா ?
Iam a true Christian என்று திறந்த நீதிமன்றத்தில் ஒரு திமுக ஆதரவு நீதிபதி சில ஆண்டுகளுக்கு முன்பு பேசினார் . கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகளை எல்லாம் இப்போது களங்கம் கற்பித்தால் ஏற்றுக்கொள்வார்களா ? அது முறையாகுமா?
திமுக அரசு தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துசுதந்திரத்தை ஒடுக்க பொய் வழக்கு போட்டு கைது செய்து மிரட்டினால் சட்டப்படியான வழக்கு விசாரணையில் நீதிபதி கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பினால் நீதிபதி RSS காரர் கருத்து சுதந்திரம் பற்றி அவருக்கு என்ன திடீர் அக்கறை என திருமுருகன் காந்தி போன்றோர் விமர்சித்து அரசின் தவறை திசை திருப்புகிறார்கள்
திமுகவுக்கும் திருமுருகன் காந்தி போன்ற துடுப்புகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் மட்டுமே கருத்து சுதந்திரம் சொந்தமானதா ? சமூகத்தில் மாரிதாஸ் போன்றவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா?
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சம்பந்தமான சர்ச்சைக்குரிய நாவல் எழுதிய கம்யூனிச ஆதரவு எழுத்தாளர் பெருமாள்முருகன்
கருத்துச் சுதந்திரத்துக்கும் ஆதரவாக வாதிட்டவர் இதே நீதியரசர் திரு G.R.சுவாமிநாதன் அவர்கள்.
கரிசல் பூமியின் கம்யூனிச சிந்தனை எழுத்தாளர் சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ரா என அழைக்கப்படும் கி ராஜநாராயணன் எழுதிய நாவலுக்காக அவர் மீது பிசிஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது . அந்த வழக்கை தள்ளுபடி செய்து கம்யூனிச எழுத்தாளரின் கருத்து சுதந்திரத்தையும் நிலை நிறுத்தியவர் திரு G.R.சுவாமிநாதன்
அரசு குளங்களைக் குத்தகைக்கு கொடுத்து அதில் கால்நடைகளை தண்ணீர் கூட குடிக்க விடாமல் தடுக்கிறார்கள் என சோ தர்மன் அவர்கள் எழுதிய ஒரு நாவலில் உள்ள கருத்தை தனது தீர்ப்பில் நிலைநிறுத்தி அரசு இயந்திரத்தை செயல்பட வைத்தவர் திரு G.R.சுவாமிநாதன்
கம்யூனிச ஆதரவு நீதிபதி ஒருவர் சென்னையில் உள்ள ஒரு கிளப்பில் வேட்டி அணிந்து சென்றால் அதற்காக அவமரியாதை செய்யப்பட்டார் வழக்கறிஞராக இருந்த போதே அந்த நீதிபதியின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து போராடியவர் திருG.R. சுவாமிநாதன்
நீதிபதியாவதற்கு முன்பும் நீதிபதியான பின்பும் அவர் மனசாட்சியோடு நேர்மையாக செயல்படக்கூடிய ஒரு நீதிமான் அதனால் கூட அவர் ஆர்எஸ்எஸ் காரர் என அறியப்பட்டாரோ என்னவோ . கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி அவருக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
சமீபகாலமாக தமிழகத்தில் நீதித்துறையில் திமுக கம்யூனிஸ்ட் திக போன்றோரின் அரசியல்ரீதியான தலையீடு அதிகரித்து வருகிறது .
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றப்பட்டால் அவர் திமுகவுக்கு சாதகமானவர் அதனால் மாற்றப்பட்டார் என அரசியல் சாயம் பூசுகிறார்கள். அதை எதிர்த்து குடியரசு தலைவருக்கு மனு அனுப்புகிறார்கள்.
நீதிபதிகளின் பணியிட மாற்றம் என்பது கால முறைப்படி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வழக்கமாக நடைபெறக்கூடியது. ஆனால் தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் யார் நீதிபதியாக இருப்பது என்பதை கூட இடதுசாரிகளும் திராவிட அமைப்புகளும் அரசியல் அழுத்தம் கொடுத்து தீர்மானிக்க நினைப்பது நீதிபரிபாலனத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்
திரு. G.R.சுவாமிநாதன் போன்ற நீதியரசர்களின் நியாயமான தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசும் இதுபோன்ற செயல்களை மாண்புமிகு நீதிமன்றம் நேரடியாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.
இல்லையெனில் திமுக கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அதற்கும் அரசியல் சாயம் பூச எங்களுக்கும் இது முன்னுதாரணமாக அமையும் .
No comments:
Post a Comment