Friday, December 17, 2021

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.

 அற்புதமான ஒரு நிகழ்வு இது.

.
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
.
ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார்.
.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.
.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...