இந்தியாவின் டாப்டென் முதலீட்டாளர்களில் ஒருவர் பி.ஆர்.சுந்தர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஒரு நேர் காணலில் அவர் கூறிய சிந்திக்கத் தூண்டும் கருத்து:
""ஒருத்தன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைப் பெருக்கி ஒரு கோடி ரூபாய் வரை கொண்டு செல்லும் வரைதான் அந்த பணத்துக்கு மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் சுவாரசியம் இருக்கும்.
பத்துகோடி நூறுகோடி ரூபாயாக மாறும்போது அது பணமாக இருக்காது. வெறும் நம்பர் மட்டுமே.
இது கொஞ்சம் கவனிக்கத் தக்க விஷயம். குழந்தைகள் ஐஸ்கீரிம்...
கேட்பார்கள். பொம்மை கேட்பார்கள். இதெல்லாம் சிலநூறு ரூபாய்களில் வாங்கிவிடமுடியும்.
காதலிக்கு நகை வாங்க சில ஆயிரம் ரூபாய் ஆகும்.
வெளிநாடு சுற்றுலா செல்ல அதிபட்சம் சில லட்சங்கள் மட்டுமே தேவைப்படும்.
ஒரு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கினால் கூட நூறுகோடி தேவைப்படாது.
நமது வாழ்க்கையில் நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து சதவீதம் சந்தோசம் தரக்கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் முதல் ஒருகோடிக்குள் நம்மால் வாங்கி விடமுடியும்.
பிறகு நம்மிடம் சேரும் பணம் எல்லாமே உபரிதான். அது வங்கியிலோ, பங்குச்சந்தையிலோ, நமது சொந்த நிறுவனத்திலோ அசையா சொத்தாக கிடைக்கும். அது பெருகிக்கொண்டே போகும்.
நூறுகோடி ரூபாய் இருப்பதாலேயே நாம் என்ன ஒருநாளைக்கு எட்டுவேளையா சாப்பிடமுடியும்? அதிகபட்சம் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்க்கலாம்.
ஆனால் ஏழு தலைமுறைகளுக்கு சேர்க்கப்படும் சொத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறைகளுக்குமேல் யாரும் பணக்காரராக இருந்து பார்த்ததில்லை. அப்படியிருக்க தனி நபரிடம் பெருகிக்கொண்டே போகும் பணத்தின் உண்மையான மதிப்பு என்ன? ...
ஒரு குறிப்பிட்ட எண் வரை மட்டும்தான் அது பணம். பிறகு அது வெறும் நம்பர்தானே? எனவே பணம் பணம் என்று அலையாமல் இருக்கும் பணத்தில் சொகுசா வாழ முயலலாமே..
அடுத்தவன் பணத்தை ஆட்டயை போடாமல் நம் பணத்தில் மதிப்பாய் வாழலாமே...
No comments:
Post a Comment