காட்டில் வேட்டை ஆடியும் ...
வழிப்போக்கர்களைக் கொன்று அவர்கள் பொருட்களைக் கொள்ளை அடித்தும் ...
வாழ்ந்து வந்த ரத்னாகரனை நாரதர் கண்டு ...
”ஏன் இப்படிப்பட்ட பாதகச் செயல்களைச் செய்கிறாய்” என்று வினவ ...
நான் என் மனைவி மக்களுக்காகச் செய்கிறேன் என்கிறான் ...
அதற்கு நாரதர் ”நீ கொண்டு செல்லும் இந்தப் பொருட்களை உன் குடும்பம் அனுபவிக்கிறது ... அது போலவே உன்னுடைய இந்தச் செயல்களால் உண்டாகும் பாவத்தையும் அவர்கள் ஏற்கிறார்களா” என்று கேட்கச் சொல்கிறார் ...
ரத்னாகரனும் அவ்வாறே சென்று தன் மனைவியிடம் கேட்க அவளோ எனக்கு என்ன தலையெழுத்தா உன்னுடைய பாவங்களில் நான் பங்கெடுக்க ... எங்களைக் காப்பாற்ற நீ எப்படி பொருள் கொண்டு வந்தால் என்ன ... அதனை அனுபவிப்பது மட்டும்தான் எங்கள் வேலை ... உன்னுடைய பாவங்களுக்கான பலன்களை நீயே அனுபவித்துக் கொள்” என்று கடிந்து கொள்கிறாள் ...
அது கேட்ட ரத்னாகரன் மனம் உடைந்து மீண்டும் நாரதரிடம் வந்து அதற்கான பரிகாரம் கேட்க உருவானவன்தான் வால்மீகி ... !
கணவன் பாவமே செய்யாதது போல் இறைவனிடம் வந்து நடிப்பதை என்பதை என்ன என்று சொல்வது ... ?
No comments:
Post a Comment